ரஜினியின் பேட்டிக்கு வந்த முதல் எதிர்ப்பு!
- IndiaGlitz, [Thursday,February 27 2020]
பொதுவாக ரஜினிகாந்த் பேட்டி அளித்தாலோ, அல்லது ஒரு மேடையில் பேசினாலோ அல்லது ஒரு கருத்தை தெரிவித்தாலோ உடனடியாக தமிழக அரசியல்வாதிகள் ரியாக்சன் செய்வது வழக்கமான ஒன்றாக கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி ரஜினி கூறியது குறித்து அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒரு வாரத்திற்கு விவாதம் செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ரஜினிகாந்த் நேற்று டெல்லி வன்முறை குறித்து பேட்டி அளித்த நிலையில் அவரது பேட்டி குறித்து எந்த ஒரு அரசியல் தலைவரும் இதுவரை கருத்து சொல்லாமல் மௌனமாக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கமலஹாசன் மட்டுமே ரஜினிகாந்தின் பேட்டியை வரவேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற எந்த அரசியல் தலைவரும் இதுவரை ரஜினியின் பேட்டி குறித்து கருத்து கூறாத நிலையில் தற்போது முதல் நபராக பாஜகவின் பிரமுகர் எஸ்ஆர் சேகர் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் ரஜினியின் பேட்டி குறித்து ஒரு கருத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது: தோல்வி என கூறுவதும் மத்திய அரசை கண்டித்திருப்பதும் ரஜினிகாந்தின் அறியாமை என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார். ரஜினி மற்றவர்களைப் பார்த்து மலிவான அரசியலை செய்யாமல் இருப்பது அவரது எதிர்காலத்திற்கு நல்லது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
https://t.co/yNAaqLjSep தோல்வி என கூறுவதும் மத்திய அரசை கண்டித்திருப்பதும் ரஜினிகாந்தின் அறியாமை என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார். ரஜினி மற்றவர்களைப் பார்த்து மலிவான அரசியலை செய்யாமல் இருப்பது அவரது எதிர்காலத்திற்கு நல்லது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
— S.R.SEKHAR (@SRSekharBJP) February 27, 2020