கமலிடம் மேட்டர் பற்றி கேட்ட பா ஜ க பிரமுகர்

  • IndiaGlitz, [Friday,February 23 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று முன் தினம் மதுரையில் தனது அரசியல் கட்சியை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார். அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். அதில் ஒரு ரசிகர் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசமாக ஸ்கூட்டரும் குவாட்டரும் உண்டா? என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த கமல், 'நான் ஆட்சிக்கு வந்தால் இலவசமாக எதுவும் கிடையாது. ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் மற்றவர்களுக்கு பொருட்களை இலவசமாக வழங்கும் அளவுக்கு வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தை உயர்த்துவேன்' என்று கூறினார்

இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த பதிலை கிண்டலடிக்கும் வகையில் ஸ்கூட்டர் கிடையாது, குவாட்டர் கிடையாது, அப்ப மேட்டர் உண்டா?  என்று தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவரும் பாஜக பிரமுகருமான நாராயணன் திருப்பதி என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாராயணன் திருப்பதியின் இந்த பதிவுக்கு நெட்டிசன் தங்களுடைய கடுமையான எதிர்ப்பு கேலி, கிண்டலுடன் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More News

மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்: யாரை சொல்கிறார் ரஜினி

ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் தனது அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ள நிலையில் சற்றுமுன் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார்.

கமல்-ரஜினி அரசியலில் கார்ப்பரேட் பிரமுகர்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கிவிட்டு அரசியல் பயணத்தை ஆரம்பித்துவிட்டார். அதேபோல் மிக விரைவில் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவிக்கவுள்ளார்.

கனடா பிரதமரை வாழ்த்தி வரவேற்ற ஆஸ்கார் நாயகன்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினர்களுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

நீங்க நிம்மதியா இருக்கிங்களா? அப்ப இந்த வீடியோவை பார்க்காதீங்க: கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று முன் தினம் அரசியல் கட்சியை ஆரம்பித்து தற்போது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் தீவிர முயற்சியில் உள்ளார்.

இன்று உலகமே ஒரு தமிழனை பார்த்து தலைநிமிர்ந்த நாள் தெரியுமா?

ஆஸ்கார் விருது என்பது பொதுவாக இந்திய கலைஞர்களுக்கு ஒரு எட்டாத கனியாகத்தான் இருந்தது. சத்யஜித்ரே போன்ற ஒருசிலர் மட்டுமே அந்த விருதை பெற்றுள்ளனர்.