ரஜினியை பாஜக நம்பக்கூடாது: சுப்பிரமணியன் சுவாமி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்து வருபவர்களில் ஒருவர். குறிப்பாக பிரதமர் மோடி உள்பட பாஜகவில் உள்ள பல தலைவர்கள் ரஜினி குறித்து நல்லவிதமாக பேசியபோதிலும் சுவாமி மட்டும் தனது பாணியை இன்றுவரை மாற்றி கொள்ளவே இல்லை.
இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த சுப்பிரமணியன் சுவாமியிடம், 'ரஜினிகாந்த் பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றாரே' என்ற கேள்விக்கு பதிலளித்த சுவாமி, 'ரஜினிகாந்த் இதுவரை பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக எனக்கு தோன்றவில்லை. அவர் இதுவரை மும்மொழி கொள்கை குறித்தோ, ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய கூடாது என்றோ பேசியதில்லை. பின்னர் எதை வைத்து அவர் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக கூறுகின்றீர்கள் என்று எனக்கு தெரியவில்லை' என்று கூறினார்.
மேலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக பல வருடங்களாக சொல்லி கொண்டிருக்கின்றார். ஆனால் இதுவரை அவர் அரசியலுக்கு வரவில்லை, இனியும் வருவார் என்று எனக்கு தோன்றவில்லை. எல்லாம் நாடகம்' என்று கூறினார். மேலும் ரஜினி போன்றவர்களை தமிழக பாஜக இனியும் நம்பாமல், தனித்து போட்டியிட முயற்சிக்க வேண்டும். தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக பாஜக நிர்வாகிகள் ராஜினாமா செய்ய வேண்டும்' என்று சுப்பிரமணியன் சுவாமி மேலும் கூறினார்.
ஒருபக்கம் ரஜினியை பாஜகவின் ஆதரவாளர் என்றும் பாஜகவின் 'பி' டீம் என்றும் ஒருசில அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ரஜினி பாஜகவின் ஆதரவாளர் இல்லை என அக்கட்சியின் முக்கிய தலைவரே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments