பாலியல் குற்றவாளியின் மனைவிக்கு பாஜக-வில் சீட்...! தொடரும் கண்டனங்கள்....என்னங்கய்யா உங்க சட்டம்...?
Send us your feedback to audioarticles@vaarta.com
உன்னாவ் சிறுமி பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் குல்தீப்சிங் செங்காரின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட பாஜக சீட் கொடுத்துள்ளது.
உன்னாவ் பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவர் தான் 17 வயது சிறுமியாக இருந்தபோது, பாஜக எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, கடந்த 2017-இல் புகாரளித்தார். ஆனால் உத்திரப்பிரதேச காவல் துறையினர் இந்தப்புகாரை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் பாதிப்படைந்த அப்பெண் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். இதன்பின் இப்பிரச்சனை நாடுமுழுவதும் பேசுபொருளாக உருவெடுத்தது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, லக்னோ நீதிமன்றத்தில் விசாரணை நடக்கையில், பாதித்த பெண்ணின் வாகனத்தின் மீது லாரி மோதியதில் உறவினர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில், அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, இப்பிரச்சனை நாடு முழுவதும் வெடித்தது. இதனால் இப்பெண் தொடர்புடைய அனைத்து வழக்குகளும் டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. பின் 5 வழக்குகளில் கைதான குல்தீப்-பிற்கு, 2 வழக்குகளில் ஆயுள் தண்டனையும், 10 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட குல்தீப் சிறையில் இருக்கிறான். உத்திரப்பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட, ஃபதேபூர் சவுர்சாய் இடத்திற்கு பாலியல் குற்றவாளியின் மனைவி சங்கீதாவுக்கு பாஜக சீட் கொடுத்துள்ளது. ஏற்கனவே பாஜக மீது நெகட்டிவ் கருத்துக்கள் மக்கள் மத்தியில் இருந்த நிலையில், இப்பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் பாஜகவின் முடிவிற்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments