ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு வெற்றி பெறுவாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இதில் ஒரு சில தொகுதிகள் மட்டும் ஸ்டார் தொகுதிகளாக ஊடகங்களால் பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஸ்டார் தொகுதிகளாக பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்று நடிகை குஷ்பு போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது
இந்த தொகுதியில் திமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது என்பதும் அதில் மூன்று முறை திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார் என்பதும், ஆனால் அதேநேரத்தில் அதிமுகவும் இந்த தொகுதியில் 4 முறை வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
பாஜக வேட்பாளராக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் அவருக்கு ஆதரவாக பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் படு சுறுசுறுப்பாக வேலை செய்து வருகிறார்கள் என்பதும் அதேபோல் திமுக வேட்பாளருக்கும் விறுவிறுப்பாக பிரச்சாரம் நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குஷ்புவின் வெற்றி வாய்ப்பு குறித்து பாஜகவினர் கூறியபோது ’கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளர் கு.க.செல்வம் 61,746 வாக்குகளை பெற்றதாகவும் அதிமுக வேட்பாளர் வளர்மதி 52,897 வாக்குகளை பெற்றதாகவும் தெரிவித்த பாஜகவினர், கடந்த முறை இந்த தொகுதியில் தனித்து போட்டியிட்ட பாஜக 8,516, வாக்குகளையும், பாமக 3,968 வாக்குகளையும் பெற்றதால், இம்முறை அந்த இரு கட்சிகளும் கூட்டணியில் இருப்பதால் அந்த வாக்குகள் குஷ்புவுக்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்,.
எனவே கடந்த முறை விழுந்த வாக்குகள் அப்படியே இம்முறை விழுந்தாலும் பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு திமுக வேட்பாளரை விட சுமார் 5000 வாக்குகள் அதிகம் பெற வாய்ப்பு உள்ளது என்று பாஜகவினர் தெரிவித்துள்ளனர்
பாஜகவினர் கணித்தபடி ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு வெல்வாரா? முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments