"பாஜக பேரணி..பிரியாணி அண்டாக்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்"..! திருப்பூர் காவல் நிலையத்தில் மனு.
Send us your feedback to audioarticles@vaarta.com
பாஜக பேரணியின்போது பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு வேண்டி திருப்பூர் காவநிலையத்தில் பிரியாணி கடை உரிமையாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் நாளை பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேரணியின்போது, பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு தர கோரி திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பிரியாணி கடை உரிமையாளர்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கொல்லப்பட்ட சசிகுமார் என்ற இந்து முன்னணி பொறுப்பாளரின் இறுதி ஊர்வலத்தில் பிரியாணி அண்டா திருடப்பட்ட சம்பவத்தை அடுத்து, திருப்பூரில் இஸ்லாமியர்கள் பகுதியில் நடைபெறும் பேரணி என்பதால் அண்டாவுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Sai Surya
Contact at support@indiaglitz.com