பிரபல தமிழ் நடிகையின் தாத்தா அடுத்த ஜனாதிபதியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கர்நாடக மாநில முதலமைச்சர், மகாராஷ்டிரா மாநில கவர்னர், மத்திய அமைச்சர் என பல பதவிகளில் இருந்த பழம்பெரும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் என்பதை பார்த்தோம்.
இந்நிலையில் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எஸ்.எம்.கிருஷ்ணா, பாஜகவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. இதற்காக அவர் விரைவில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர்களை சந்தித்து பாஜகவில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆறு மாதமாகவே எஸ்.எம்.கிருஷ்ணா ரகசியமாக பாஜக மேலிடத்தலைவர்களிடம் இதுகுறித்து ஆலோசனை செய்து வந்ததாகவும், ஜனாதிபதி வேட்பாளருக்கான முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்ததாகவும் பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். எனவேதான் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்போது வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments