மீண்டும் கமல் கட்சிக்கே சென்ற பாஜக பிரபலம்!

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியில் இருந்த விலகிய பிரபலம் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவுக்கு தாவிய நிலையில் தற்போது மீண்டும் பாஜகவிலிருந்து கமல் கட்சிக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்தவர் அருணாச்சலம். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் பாஜகவிலிருந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:

மக்கள்‌ நீதி மய்யத்தின்‌ முன்னாள்‌ நிறுவனப்‌ பொதுச்‌ செயலாளர்‌ திரு. அருணாச்சலம்‌ அவர்கள்‌ நமது தலைவர்‌, நம்மவர்‌ திரு. கமல்ஹாசன் அவர்களை நேரில்‌ சந்தித்து இன்று நமது கட்சியில்‌ மீண்டும்‌ இணைந்தார்‌.

அரசியலில்‌ ஆழங்காற்பட்ட அனுபவம்‌ மிக்க திரு. அருணாச்சலம்‌ தமிழக அரசியலில்‌ ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த நம்மவர்‌ அவர்களால்தான்‌ முடியும்‌ என்பதை உணர்ந்து களப்பணியாற்றியவர்‌. அவர்‌ மீண்டும்‌ நம்மோடு இணைவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவரை மனதார வாழ்த்தி வரவேற்கிறேன்‌.

வருகிற நாடாளுமன்றத்‌ தேர்தலில்‌ மக்கள்‌ நீதி மய்யத்தினை பெருவெற்றியடையச்‌ செய்யவேண்டுமெனும்‌ உயரிய நோக்கத்துடன்‌ உழைக்க வந்திருக்கும்‌ திரு. அருணாச்சலம்‌ அவர்களோடு மக்கள்‌ நீதி மய்யத்தின்‌ நிர்வாகிகளும்‌, அனைத்து உறுப்பினர்களும்‌ ஒத்துழைத்து நமது கட்சியின்‌ வளர்ச்சிக்கும்‌ வெற்றிக்கும்‌ உதவவேண்டுமென அன்புடன்‌
கேட்டுக்கொள்கிறேன்‌.