பிரகாஷ்ராஜை வம்புக்கு இழுத்த பாஜக பிரமுகர்

  • IndiaGlitz, [Tuesday,May 15 2018]

கர்நாடக தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலின்போது பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்களில் ஒருவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.

ஏற்கனவே பாஜக மீதும், பிரதமர் மோடி மீது அவ்வப்போது விமர்சனம் செய்து வந்த பிரகாஷ்ராஜ், மதவாத சக்தியை கர்நாடகாவில் இருந்து விரட்ட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். ஆனால் அவருடைய பிரச்சாரம் எடுபடவில்லை என்பது தேர்தல் முடிவில் இருந்து தெரிய வருகிறது.

இந்த நிலையில் வெற்றி செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் பிரகாஷ்ராஜை வம்புக்கு இழுக்கும் வகையில் பாஜக பிரமுகர் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில், 'கர்நாடகாவை விட்டு கிளம்பி விட்டாரா பிரகாஷ்ராஜ்? பாவம். அவரை விட்டு விடுங்கள்' என்று பதிவு செய்துள்ளார். அவருடைய பதிவிற்கு ஒருசிலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நோட்டாவை விட குறைவான வாக்குகள் வாங்கிய தமிழக பாஜகவினர்களே தமிழகத்தில் இருக்கும்போது, பிரகாஷ்ராஜ் ஏன் கர்நாடகாவை விட்டு கிளம்ப வேண்டும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More News

தென்னிந்தியாவில் நுழையும் மணியோசை: அமித்ஷாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, அக்கட்சி தென்னிந்தியாவில் நுழைவதற்கான மணியோசை போல் உள்ளது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் ஆண்டனி ஆரம்பித்து வைத்த புது டெக்னிக்

ஒரு புதிய திரைப்படத்தின் புரமோஷன் என்றால் டீசர், டிரைலர் வெளியிடுவதைத்தான் இதுவரை தமிழ் திரையுலகம் செய்து வருகிறது.

பாஜக வெற்றி குறித்து பிரபல நடிகரின் கருத்து

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக தேர்தலின் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்து கொண்டிருக்கின்றது. அந்த கட்சி கர்நாடகாவில் யாருடைய உதவியும்

பிரபல திரைக்கதை ஆசிரியர் - எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்

தமிழ் எழுத்துலகில் புரட்சி செய்த எழுத்தாளர் பாலகுமாரன் இன்று காலமானார்.

கர்நாடகாவில் வெற்றி, இனி காவிரி பிரச்சனை இல்லை; தமிழிசை செளந்திரராஜன்

தமிழகம், கர்நாடகம் இடையே பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் காவிரி பிரச்சனை இனி முடிவுக்கு வரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.