பத்து மணிக்கு மேல் பட்டாசு வெடிப்பேன்: பாஜக எம்பி அதிரடி

  • IndiaGlitz, [Wednesday,October 24 2018]

பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இந்த தீர்ப்பின்படி பட்டாசு தயாரிக்கவோ அல்லது பயன்படுத்தவோ தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், அதே நேரத்தில் சில நிபந்தனைகளை விதித்தது. அவற்றில் ஒன்று தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது ஆகும்

இந்த தீர்ப்பு பலரை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. தீபாவளி அன்று அதிகாலை எழுந்து எண்ணெய் குளியல் போட்டு அதன் பின்னர் புத்தாடை அணிந்து பலகாரங்கள் சாப்பிட்ட பின்னர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் பட்டாசு வெடிப்பது வழக்கம். ஆனால் நீதிமன்றம் இரவு 8 மணிக்கு மேல் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறிய மத்திய பிரதேச மாநில பா.ஜ.க எம்.பி., சிந்தாமணி மாளவியா என்பவர் இந்துக்கள் பண்டிகையை எப்போது கொண்டாட வேண்டும் என ஏற்கனவே காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று கொள்ள முடியாது. நான் பத்து மணிக்கு மேல் பட்டாசு வெடிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்து பாரம்பரியங்களில் பிறர் தலையீட்டை நான் சகித்து கொள்ள முடியாது என்றும், மத பாரம்பரியத்தை கடைபிடிக்க சிறை செல்வதென்றாலும் தனக்கு மகிழ்ச்சியே என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

கூத்துப்பட்டறை முத்துசாமி மறைவிற்கு விஜய்சேதுபதி இரங்கல்

இன்று உயர்ந்த நிலையில் உள்ள பல கலைஞர்களை செதுக்கிய கூத்துப்பட்டறை நா.முத்துசாமி இன்று காலமானார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவருடைய மறைவால் திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.

நானும் சங்கடங்களை சந்தித்துள்ளேன். சுசி கணேசன் குறித்து அமலாபால்

இயக்குனர் சுசி கணேசன் அவர்கள் 'திருட்டுப்பயலே' திரைப்படத்தை இயக்கியபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கவிஞர் லீலா மணிமேகலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீடூ குற்றச்சாட்டை கூறினார் எ

சிசிடிவி கேமிரா இல்லாத தியேட்டர்களுக்கு படம் கிடையாது: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு உள்ள ஒரு பெரிய பிரச்சனை திருட்டி டிவிடி மற்றும் ஆன்லைன் பைரஸி. இந்த இரண்டையும் முற்றிலும் ஒழித்துவிட்டாலே பாதி படங்கள் வெற்றி பெற்றுவிடும்

கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி காலமானார்

சினிமா கலைஞர்கள் உள்பட பலருக்கு வழிகாட்டியாக இருந்த கூத்துப்பட்டறையின் நிறுவனர் ந.முத்துசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82

'விஸ்வாசம்' செகண்ட்லுக் வெளியிடும் தேதி - நேரம் அறிவிப்பு

தல அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் வசன படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இந்த படத்தில் தனது பகுதியின் டப்பிங் பணியை அஜித் முடித்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.