பத்து மணிக்கு மேல் பட்டாசு வெடிப்பேன்: பாஜக எம்பி அதிரடி

  • IndiaGlitz, [Wednesday,October 24 2018]

பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இந்த தீர்ப்பின்படி பட்டாசு தயாரிக்கவோ அல்லது பயன்படுத்தவோ தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், அதே நேரத்தில் சில நிபந்தனைகளை விதித்தது. அவற்றில் ஒன்று தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது ஆகும்

இந்த தீர்ப்பு பலரை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. தீபாவளி அன்று அதிகாலை எழுந்து எண்ணெய் குளியல் போட்டு அதன் பின்னர் புத்தாடை அணிந்து பலகாரங்கள் சாப்பிட்ட பின்னர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் பட்டாசு வெடிப்பது வழக்கம். ஆனால் நீதிமன்றம் இரவு 8 மணிக்கு மேல் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறிய மத்திய பிரதேச மாநில பா.ஜ.க எம்.பி., சிந்தாமணி மாளவியா என்பவர் இந்துக்கள் பண்டிகையை எப்போது கொண்டாட வேண்டும் என ஏற்கனவே காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று கொள்ள முடியாது. நான் பத்து மணிக்கு மேல் பட்டாசு வெடிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்து பாரம்பரியங்களில் பிறர் தலையீட்டை நான் சகித்து கொள்ள முடியாது என்றும், மத பாரம்பரியத்தை கடைபிடிக்க சிறை செல்வதென்றாலும் தனக்கு மகிழ்ச்சியே என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது