கோமியம் குடித்தால் கொரோனா வராது? இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பும் வீடியோ!
- IndiaGlitz, [Monday,May 10 2021]
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் நான் தினமும் மாட்டுக் கோமியம் குடிக்கிறேன். அதனால்தான் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. அதோடு தினமும் 18 மணிநேரம் வியர்வை சிந்தி வலிமையோடு உழைப்பதற்கும் இதுதான் காரணம். மேலும் கொரோனா தொற்று தீவிரம் பெற்று வரும் நிலையில் அனைவரும் கூட்டமாக மாட்டுக் கோமியம் அருந்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள வீடியோ கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. உத்திரப் பிரதேச மாநிலத்தின் பைரியா மாவட்டத்தின் எம்.எல்.ஏவாக இருப்பவர் பா.ஜ.கவை சேர்ந்த சுரேந்தர் சிங். இவர் தான் தினமும் கோமியம் அருந்தி வருவதாகத் தெரிவித்து உள்ளார். அதோடு இதனால்தான் தனக்கு கொரோனா பாதிப்பு வரவில்லை என்றும் வீடியோ வெளியிட்டு உள்ளார். மேலும் அனைவரும் கூட்டாக மாட்டுக் கோமியம் அருந்தவும் இவர் வலியுறுத்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பின் துவக்கத்தில் இருந்தே மாட்டுக் கோமியம் மற்றும் மாட்டுச் சாணத்தின் மீது சிலர் அளவுக்கு அதிகமான நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒன்று என்பதை விஞ்ஞானிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனாலும் மாட்டுக் கோமியத்தை அருந்துவது போன்ற வீடியோக்களும் புகைப்படங்களும் அவ்வபோது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் துவங்கிய கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் தினம்தோறும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. அதிலும் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து 4 லட்சத்தையும் தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை இதுவரை 4 முறை பதிவாகி இருக்கிறது. இந்நிலையில் இந்தியா முழுக்கவே ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டு பல மாநிலங்கள் முழு ஊரடங்கை அறிவித்து உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
यूपी के बलिया से बीजेपी विधायक सुरेंद्र सिंह ने बताया कोरोना से बचने का तरीका
— आदित्य तिवारी / Aditya Tiwari (@aditytiwarilive) May 7, 2021
प्रतिदिन सुबह ठंडे पानी में पांच ढक्कन गोमूत्र मिलाकर पीने से नहीं होगा कोरोना
लोगों से गोमूत्र पीने की विधायक ने की अपील pic.twitter.com/HmHwUYNerr