எம்எல்ஏ-வை சாக்கடையில் நடக்க வைத்த மக்கள்? விவாதத்தை கிளப்பும் பகீர் வீடியோ!
- IndiaGlitz, [Saturday,July 31 2021]
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவரை, சொந்த தொகுதி மக்களே வலுக்கட்டாயமாகச் சாக்கடையில் நடக்க வைத்த காட்சி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஆனால் இந்தக் வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ள அந்த எம்எல்ஏ, தொகுதி “மக்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளவே நான் இப்படி செய்தேன். தற்போது உள்ளூர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளேன்“ என விளக்கம் அளித்து இருக்கிறார்.
இந்தியாவில் அதிக தொகுதிகளை கொண்ட உத்திரப்பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. அதற்கான வேலையை இப்போதே அங்குள்ள கட்சிகள் துவங்கிவிட்டன. இந்நிலையில் மீரட் மாவட்டத்தில் உள்ள கர்முக் தேஸ்வர் எனும் தொகுதி எம்எல்ஏவான கமல் மாலிக் என்பவர் கடந்த சில தினங்களாகத் தனது தொகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் ஹபூரின் நானாஸ் எனும் பகுதிக்குச் சென்றபோது அங்குள்ள கிராமம் மக்கள், உங்கள் தொகுதியின் நிலைமையை நீங்களே பாருங்கள் எனக் குற்றம் சாட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒரு தெரு முழுக்கவே சாக்கடை நீர் ஓடிய நிலையில், அந்தத் தண்ணீரில் எம்எல்ஏ கமல் மாலிக்கை நடக்கச் சொன்னதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த கிராமத் தலைவரின் கணவர் ரவீந்திரக்குமார் என்பவர் எம்.எல்.ஏ வின் கையைப் பிடித்து சாக்கடையில் நடக்க வைத்திருக்கிறார்.
இந்தக் காட்சி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்த எம்.எல்.ஏ கமல் மாலிக், தொகுதியை சீர்ப்படுத்தவே நான் சாக்கடையில் நடந்து சென்றேன். தற்போது உள்ளூர் அதிகாரிகள் கிராமத்தின் நிலைமையை புரிந்து கொண்டு இருப்பர். ஆனால் எனது வீடியோ தவறாக காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்து இருக்கிறார்.
UP: जब बीजेपी विधायक को नाराज जनता ने सीवर के पानी में चलवाकर महसूस करवाया दर्द, VIDEO वायरल#UP #BJPMLA #TaxExtortion #BJPDebateSeDaroMat #ParliamentAaoModi pic.twitter.com/2BQM5CpjgE
— नरेन्द्र अग्रवाल (@narendraaggrwal) July 30, 2021