ஆட்சியை பிடிக்கின்றது பாஜக! முதல் சுற்றிலேயே மும்மடங்கு முன்னிலை
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணத்தொடங்கப்பட்ட நிலையில் முதல்கட்ட முடிவுகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாகவே வந்துள்ளது. முதல் அரை மணி நேரத்தில் வந்த முன்னிலை நிலவரப்படி பாஜக கூட்டணி 160க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 60 தொகுதிகளிலும் மற்றவை 31 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் ஆட்சி அமைக்க 273 தொகுதிகள் மட்டுமே தேவை என்ற நிலையில் இன்னும் சுமார் 100 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்துவிட்டால் மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதியாகிவிடும்.
மேலும் விஐபி வேட்பாளர்களான பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல்காந்தி, கனிமொழி, நிதின் கட்காரி ஆகியோர் முன்னிலை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் பாஜக பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தாலும் தமிழகத்தில் திமுக 9 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக இன்னும் எண்ணிக்கையையே தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments