எம்.எல்.ஏவை செருப்பால் அடித்த பாஜக எம்பி: பெரும் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
மாற்று கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்வதும், சிலசமயம் கைகலப்பில் ஈடுபடுவதும் இந்திய அரசியலுக்கு புதியது அல்ல. ஆனால் ஒரே கட்சியை சேர்ந்த இருவர் ஒருவரை ஒருவர் தாக்கியதோடு செருப்பாலும் அடித்த கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உபி மாநிலத்தில் இன்று பாஜக கட்சி நிர்வாகிகளின் கூட்டம் நடந்தது. இதில் பாஜக எம்பி சரத் திரிபாதி மற்றும் பாஜக எம்.எல்.ஏ ராகேஷ் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் இடையில் திடீரென இருவருக்கும் இடையே கருத்துமோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் சரத் திரிபாதி எம்பி, திடீரென தனது காலில் இருந்த செருப்பை கழட்டி ராகேஷ் சிங் எம்.எல்.ஏவை அடித்தார். இதனையடுத்து ராகேஷ் சிங்கும் சரத் திரிபாதியை அடித்தார். நிலைமை விபரீதமாக சென்று கொண்டிருந்ததை உணர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் இருவரையும் விலக்கிவிட்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பாஜகவின் மானத்தை கப்பலேற்றி வருகிறது.
#WATCH Sant Kabir Nagar: BJP MP Sharad Tripathi and BJP MLA Rakesh Singh exchange blows after an argument broke out over placement of names on a foundation stone of a project pic.twitter.com/gP5RM8DgId
— ANI UP (@ANINewsUP) March 6, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com