கொரனோ வந்தால் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன்: பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு

பாஜக பிரமுகர்கள் சிலர் கடந்த 6 ஆண்டுகளாக அவ்வப்போது சர்ச்சைக்கு சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர் என்பதும் சர்ச்சைக்குரிய பேச்சால் அவர்கள் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொள்கின்றனர் என்பதும் தெரிந்ததே. 

இந்த நிலையில் பாஜக தேசியச் செயலாளராக நேற்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனுபம் ஹஸ்ரா என்பவர் நேற்று மாலை மேற்குவங்க மாநிலத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது ’எங்கள் கட்சியின் தொண்டர்கள் கொரோனாவைவிட ஒரு பெரிய எதிரியுடன் போராடி வருகிறார்கள். அவர் தான் மம்தா பானர்ஜி. ஒருவேளை நான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் நான் நேராக மம்தா பானர்ஜியை சென்று கட்டிப் பிடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

பாஜக பிரமுகரின் இந்த கருத்தால் மம்தா பானர்ஜி கட்சியின் தொண்டர்கள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர் என்பதும், அனுபம் ஹஸ்ராவுக்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அஜித் இறுதிச்சடங்கிற்கு வராதது குறித்து விளக்கமளித்த எஸ்பிபி சரண்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சமீபத்தில் காலமான நிலையில் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் அவருக்காக இரங்கல் தெரிவித்தது.

நாம் தமிழர் கட்சியின் சீமான் மருத்துவமனையில் அனுமதி!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி அவரது கட்சியின் தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது 

காகிதங்களை வைத்து போர் தளவாடங்களை வடிவமைக்கும் இளைஞர்… கலைநயத்துக்கு குவியும் பாராட்டு!!!

புதுக்கோட்டை வாலிபர் ஒருவர் வெறுமனே காகிதங்களை வைத்து போர் தளவாடங்கள் முதற்கொண்டு இந்தியப் பாதுகாப்புத் துறையில் உள்ள அத்தனைப் பொருட்களின் மாதிரியையும் வடிவமைத்து விடுகிறார்.

எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது: பிரதமருக்கு அண்டை மாநில முதல்வர் கடிதம்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் காலமானதை அடுத்து ஒட்டுமொத்த இந்திய திரை உலகமும் சோகத்தில் மூழ்கியது என்பது தெரிந்ததே.

நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்க அனுமதியா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் திரை அரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும்