நீட் ஆதரவு தாய் தற்கொலையின் போது எங்கே போனீர்கள்? எச்.ராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி அனைத்து முயற்சிகளிலும் தோல்வி அடைந்த பின்னர் தனது மருத்துவ படிப்பு என்ற கனவு முற்றிலும் கலைந்ததை தாங்க முடியாமல்தான் நேற்று மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலையை யாரும் நியாயப்படுத்தவில்லை. நினைத்த படிப்பு, நினைத்த வேலை, நினைத்த வாழ்வு கிடைக்கவில்லை என்றால் தற்கொலை என்று முடிவெடுத்தால் இன்று யாருமே உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள். அது அனைவருக்கும் தெரியும். ஒரு நிமிடத்தில் எடுக்கும் உணர்ச்சிவசப்பட்ட முடிவுதான் தற்கொலை. ஆனால் அதற்காக அந்த மாணவியின் இறப்பில் சந்தேகப்படுவது, அவருடைய உழைப்பை கொச்சைப்படுத்துவது, மரணத்தை வைத்து அரசியல் செய்வது என்பது மிருகச்செயல்
அனிதாவின் மரணத்தால் தமிழகமே துன்பக்கடலில் மூழ்கியிருக்கும் நிலையில் அவரது மரணத்தையே கொச்சைப்படுத்தும் விதமாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அனிதாவின் மரணம் தற்கொலையா என விசாரணை நடத்த வேண்டும். என்றும், வேலூரில் நீட்-க்கு ஆதரவான மாணவனின் தாய் தற்கொலை செய்து கொண்டபோது இன்று குரல் கொடுக்கும் எதிர்க்கட்சியினர் எங்கே சென்றிருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நீட் குறித்து மத்திய அரசு மீது கடுமையாக விமர்சனம் செய்த வைகோவுக்கு, 'உச்ச நீதிமன்ற தீர்ப்பை அரசு மீற முடியாது என்றும் கள்ளத் தோனியில இலங்கை போகும் விஷயமல்ல நீட் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி விஷயத்தில் இதே உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசும், மாநில அரசும் மதித்ததா? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. பிணத்தில் கூட அரசியல் செய்ய நினைக்கும் இதுபோன்ற அரசியல்வாதிகளை பொதுமக்கள் நன்றாக ஞாபகம் வைத்து தேர்தலின்போது தங்கள் கோபத்தை வெளிப்படுத்த வேண்டும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments