பாஜக ஆபத்தான கட்சிதான்: ரஜினிகாந்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி என்றால் அந்தளவுக்கு பாஜக ஆபத்தான கட்சியா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி 'அப்படிதான் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அப்போது கண்டிப்பாக அப்படித் தானே இருக்கும்' என்று கூறினார்.
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குறித்த கேள்விக்கு 'சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் சட்டம் இயற்றுவது அவசியம்' என்று ரஜினிகாந்த் கூறினார்.
மேலும் பணமதிப்பிழப்பு கொண்டு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது, இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு, 'பணமதிப்பிழப்பு நீக்கத்தை சரியாக செயல்படுத்தவில்லை. அதை அமல்படுத்திய விதம் தவறு. அதைப்பற்றி விரிவாக பேச வேண்டியுள்ளது' என்று கூறினார்.
மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து எனக்கு தெரியாது. அதுகுறித்து இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இன்னொருமுறை அதுபற்றி கருத்து கூறுகிறேன் ன்று ரஜினிகாந்த் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments