டிடிவி தினகரனை அடுத்து டெல்லி போலீஸ் வளையத்தில் இரண்டு அதிமுக விஐபிகள்?
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரா மூலம் லஞ்சம் கொடுக்க முயற்சித்த டிடிவி தினகரன் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்,. இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார் என்றும் அதன்பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்கவும் டெல்லி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தினகரன், சுகேஷ் ஆகியோர்களிடம் செய்த விசாரணையில் இந்த குற்றச்செயலுக்கு அதிமுகவின் முக்கிய எம்பி ஒருவர் பின்னணியில் இருப்பதாகவும், அவர் மட்டுமின்றி தினகரனின் வலதுகரமாக செயல்பட்ட இன்னொரு விஐபி என இருவரும் தற்போது டெல்லி போலீஸார் வளையத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் தினகரன் கைதான தகவல் வெளியானதும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருசிலர் தங்களுடைய செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை வளைக்க சென்னைக்கு டெல்லி போலீஸ் டீம் ஒன்று விரைவில் வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தினகரன், சுகேஷ் சந்திரசேகருக்குக் கொடுத்த பணம், ஹவாலா என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதால் சென்னையைச் சேர்ந்த ஹவாலா கும்பலைச் சேர்ந்தவர்களுக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஏற்கனவே பாஜகவின் எச்.ராஜா, டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்... 'அடுத்து, அ.தி.மு.க அமைச்சர்கள்' என்று தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளதால் அடுத்தடுத்த நாட்களில் அதிமுக விஐபிகளின் கைது உள்பட பல செய்திகள் தமிழக அரசியலை பரபரப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com