சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டுகிறது: பிரபல பாஜக பிரமுகர்

  • IndiaGlitz, [Monday,July 15 2019]

புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாக பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த ஒரு கல்வி நிகழ்ச்சியில் சூர்யா மிக அரிதாக கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து அவர் காட்டமாக விமர்சனம் செய்ததோடு, நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாத நிலையில், அந்த மாணவர்களால் எப்படி நீட் தேர்வுக்கு தயாராக முடியும் என்று கேள்வி எழுப்பிய சூர்யா, மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக்கொள்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்றும், அந்த கல்விக்கொள்கையை அனைவரும் படித்து அதில் உள்ள பாதகமாக விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

சூர்யாவின் இந்த பேச்சை அரசியல் தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்றாலும், கல்வியாளர்களும், சமூக வலைத்தளப்பயனாளிகளும் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
 

More News

கடாரம் கொண்டான் படத்தின் கரெக்டான ரன்னிங் டைம்!

சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கடாரம் கொண்டான்' என்ற அதிரடி ஆக்சன் படம் வரும் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மோகன் வைத்யா சேஃப்: அப்போ வெளியேறுவது யார்?

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறிக் கொண்டு இருப்பது தெரிந்ததே

வனிதா-தர்ஷன் பிரச்சனையின்போது ஒதுங்கி இருந்தது ஏன்? லாஸ்லியா விளக்கம்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவை அதிகம் பேச வைத்து பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார் கமல்ஹாசன். பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலும் அமைதியாக இருக்கும் லாஸ்லியா,

அரசியல் களத்தில் கமலை விட ரஜினிக்கு ஆதரவு அதிகம்: பிரபல இயக்குனர் பேட்டி

அரசியல் களத்தில் கமல்ஹாசனை விட ரஜினிகாந்துக்கு மக்களின் ஆதரவு அதிகம் இருக்கும் என பிரபல இயக்குனர் அமீர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மீரா-தர்ஷன் புரபோஸ் விவகாரம்: கவின் உதவ கமல் வேண்டுகோள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவே ஜாலியாகவும் ரசிக்கும்படியாக இருப்பதால் இன்றைய நிகழ்ச்சியும் கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது