பணத்துக்காக மட்டுமே கவலைப்படுபவர்கள் கமல்-சத்யராஜ். எச்.ராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசனை கடந்த சில நாட்களாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சைக்குரிய வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இன்னொரு பாஜக தலைவரான எச்.ராஜாவும் கமல்ஹாசனின் தமிழ்ப்பற்று குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்துள்ளார். கமல் மட்டுமின்றி அவர் சத்யராஜையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த எச்.ராஜா, 'சத்யராஜ் கமல்ஹாசன் ஆகியோர்களின் தமிழ்ப்பற்று, தமிழர் உணர்வு மேலோட்டமானது என்றும் இரண்டு பேர்களும் பணத்துக்காக மட்டுமே கவலைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு கமல் மற்றும் சத்யராஜ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக தமிழ் மீது கமல், சத்யராஜ் வைத்துள்ள பற்று தமிழர்கள் அனைவரும் அறிந்துள்ள நிலையில் எச்.ராஜாவின் இந்த கருத்து துரதிஷ்டமானது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com