இரண்டு குழந்தை தான்.. அதுக்கு மேல போனா அரசு சலுகைகள் எல்லாம் கட்..! - எச்சரிக்கும் அமித் ஷா ஜி.
Send us your feedback to audioarticles@vaarta.com
இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பி.ஜே.பி அரசு, தங்களது அனைத்து அஜெண்டாக்களையும் அதிரடியாக நிறைவேற்றிவருகிறது. இந்நிலையில், இன்னும் சில நாள்களில் அடுத்த அதிரடி மசோதாவை நிறைவேற்றி, நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கத் திட்டமிட்டுள்ளார், அமித் ஷா.
2019-ம் ஆண்டு மே மாதம், இரண்டாவது முறையாக அதீத பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது பி.ஜே.பி. இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன், தங்களது நீண்டகாலத் திட்டங்கள் அனைத்திற்கும் உயிர்கொடுக்கும் முடிவுக்கு அப்போதே வந்தது.
குறிப்பாக, பி.ஜே.பி அரசின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் பல ஆண்டுகளாகத் தங்கள் கொள்கையாக வைத்திருந்த சில திட்டங்களை இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றிட வேண்டும் என்று பி.ஜே.பி அரசுக்கு மறைமுக அழுத்தமும் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக, முத்தலாக் மசோதா, காஷ்மீர், குடிமக்கள் பதிவு, குடியுரிமை சட்ட திருத்த மசோதா என பலவற்றை அடுத்தடுத்து கொண்டு வந்தது. இதற்கடுத்து பொது சிவில் சட்டம் வரவிருக்கும் நிலையில் ஈனோர் புதிய திட்டமும் அரசிடம் உள்ளது.
அது, ஒரு தம்பதிக்கு இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி. அதற்கு மேல் குழந்தைகள் பெற்றால், அரசு சலுகைகளை ரத்து செய்யும் சட்டத்தைக் கொண்டுவர இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் ரேஷன், மானியம் உள்ளிட்டவற்றை அரசு நிறுத்திவிடும். மூன்றாவது குழந்தை பெற அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க முடியாது என்பன போன்ற விஷயங்களை இந்தச் சட்டத்தில் புகுத்த இருக்கிறது மத்தியஅரசு.
‘முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, சீனா இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து, மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தியது. ஆனால் அடுத்த தலைமுறையில், இளைஞர்களின் தட்டுப்பாடு அந்த நாட்டில் அதிகரித்து, மக்கள் தொகையில் பிறப்பு விகிதமும் கணிசமாகக் குறைந்தது. எனவே, இந்த சட்டத்தின் தவற்றை உணர்ந்துகொண்ட சீனா, இப்போது குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கிறது. இந்தியாவும் அவசரப்பட்டு பிறப்புக் கட்டுபாடு சட்டத்தைக் கொண்டுவந்து, சீனாவின் நிலை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது’ என்று அச்சப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com