அதிமுக கொடிக்கம்பத்தில் பாஜக கொடி! அதிர்ச்சியில் தொண்டர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
திண்டுக்கல் அருகே உள்ள அதிமுக கொடிக்கம்பத்தில் அதிமுக கொடிக்கு பதிலாக பாஜக கொடி பறந்ததால் அந்த பகுதியில் உள்ள அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே தமிழக அரசு, மத்தியில் ஆளும் பாஜகவின் பினாமி அரசு என்று எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் அதிமுகவினர் இதை மறுத்து வந்தனர். மேலும் இன்றுதான் முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில், பாஜகவுடன் கூட்டணியும் இல்லை நட்பும் இல்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் என்ற இடத்தின் பேருந்து நிலையத்தில் உள்ள அதிமுக கொடிக் கம்பத்தில் இருந்த அதிமுக கொடியை மர்ம நபர்கள் யாரோ இறக்கி விட்டு அதற்கு பதிலாக பாஜக கொடியை ஏற்றியுள்ளனர்.
இதனை கண்ட அந்த பகுதி அதிமுகவினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக பாஜக கொடியை இறக்கியதோடு, இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள கீரனூர் போலீஸார், கொடியேற்றிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com