அதிமுக கொடிக்கம்பத்தில் பாஜக கொடி! அதிர்ச்சியில் தொண்டர்கள்

  • IndiaGlitz, [Wednesday,March 21 2018]

திண்டுக்கல் அருகே உள்ள அதிமுக கொடிக்கம்பத்தில் அதிமுக கொடிக்கு பதிலாக பாஜக கொடி பறந்ததால் அந்த பகுதியில் உள்ள அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே தமிழக அரசு, மத்தியில் ஆளும் பாஜகவின் பினாமி அரசு என்று எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் அதிமுகவினர் இதை மறுத்து வந்தனர். மேலும் இன்றுதான் முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில், பாஜகவுடன் கூட்டணியும் இல்லை நட்பும் இல்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் என்ற இடத்தின் பேருந்து நிலையத்தில் உள்ள அதிமுக கொடிக் கம்பத்தில் இருந்த அதிமுக கொடியை மர்ம நபர்கள் யாரோ இறக்கி விட்டு அதற்கு பதிலாக பாஜக கொடியை ஏற்றியுள்ளனர்.

இதனை கண்ட அந்த பகுதி அதிமுகவினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக பாஜக கொடியை இறக்கியதோடு, இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள கீரனூர் போலீஸார், கொடியேற்றிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

More News

இது ஆண்டவன் கொடுத்த வாய்ப்பு: ரஜினி வெளியிட்ட வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று இமயமலையில் இருந்து சென்னை திரும்பினார் என்பதும் அதன்பின்னர் அளித்த பேட்டியில் தனக்கு பின்னால் ஆண்டவனை தவிர யாரும் இல்லை என்று கூறியதையும் பார்த்தோம்

பாவம் அஜித்-விஜய்: கூறியது யார் தெரியுமா?

நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்த அனுமதித்தது குறித்து நடிகர் சித்தார்த் கூறிய கருத்தை சற்றுமுன் பார்த்தோம்.

'இருட்டு அறைக்கு' கிடைத்த எதிர்பார்த்த சென்சார் சான்றிதழ்

'ஹர ஹர மகாதேவி' படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமாரின் அடுத்த படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிந்தது

மால்களில் பார்க்கிங் கட்டணம் ரத்து! இங்கல்ல...தெலுங்கானாவில்

தமிழகத்தின் பெருநகரங்களில் நடைபெறும் பார்க்கிங் கட்டணம் என்ற கொள்ளையை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில்

விஜய் படத்திற்கு சிறப்பு அனுமதி: கருத்து கூறிய சித்தார்த்

தமிழ் சினிமாவுலகம் இதுவரை கண்டிராத வகையில் புதிய படங்கள் வெளியீடு இல்லை, படப்பிடிப்பு இல்லை, போஸ்ட் புரடொக்சன்ஸ் இல்லை என ஒட்டுமொத்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.