ஒரு ரூபாயில் சானிடரி நாப்கின், நதிகள் இணைப்பு, ராமர் கோவில்: பாஜக தேர்தல் அறிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியான நிலையில் சற்றுமுன் பாஜக தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் 48 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ:
* 60 வயதான சிறு, குறு விவசாயிகளுக்கு ஒய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
* விவசாயிகளுக்கு பென்ஷன் திட்டம். வட்டி இல்லாமல் ரூ.1 லட்சம் வரை குறுகிய கால விவசாய கடன்
* அரசியலமைப்பு சட்டத் திருத்தம் மூலம் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு
* நாடு முழுவதும் 60000 கிமீ நீளத்திற்கு புதிய நெடுஞ்சாலைகள்
* வாஜ்பாய் கனவை நனவாக்கும் வகையில் நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
* சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைகள், சடங்குகளை உச்சநீதிமன்றம் முன் எடுத்துரைத்து, அவற்றை பாதுகாப்போம்
* ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை நடத்த உரிய நடவடிக்கை
* அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனைத்து வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
* ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்!
* அனைத்து மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து GST நடைமுறைகள் மேலும் எளிதாக்கப்படும்
* 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு!
* ரூ.25 லட்சம் கோடியில் கிராமப்புற வளர்ச்சிக்கு திட்ட
* பொருளாதாரத்தை உயர்த்த உறுதி
▪️ கல்வி சுகாதாரம் அனைவருக்கும் வழங்க திட்டங்கள்
▪️ தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
▪ ️விவசாயிகள் வணிகர்களுக்கு ஓய்வூதியம்
* முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்
* மத்திய பல்கலையில் அடுத்த 5 ஆண்டுகளில் 50% இடங்கள் அதிகரிக்கப்படும்
* நாடு முழுவதும் 50 உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்
* கருப்பு பணம் மற்றும் பினாமி சொத்துகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் தொடரும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments