அர்ஜுன மூர்த்தியுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம்: பாஜக
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார் என்பதும், தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூன மூர்த்தி ஆகிய இருவரையும் கட்சியின் முக்கிய பணிகளுக்கு நியமனம் செய்திருப்பதாக அறிவித்தார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் ரஜினியால் நியமனம் செய்யப்பட்ட அர்ஜுன மூர்த்தி அவர்கள் ஏற்கனவே பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த நிலையில் அந்த பதவியை அவர் உடனே ராஜினாமா செய்தார். மேலும் டுவிட்டரிலும் இதுகுறித்த மாற்றத்தை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் அவர்கள் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜக கட்சியின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் அர்ஜூன மூர்த்தி அவர்களுடைய ராஜினாமாவை ஏற்று அவரை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார்.
மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தபடுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout