விஜய் வீட்டிற்கு காவி வேட்டி அனுப்பிய பாஜகவினர்!

  • IndiaGlitz, [Monday,May 27 2019]

நடிகர் விஜய் வீட்டிற்கு பாஜகவினர் காவி வேட்டி அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள், 'அரசியலில் 90 சதவிகிதம் பேர் திருடர்களாக இருப்பதாகவும், அரசியல்வாதிகள் யாரும் சினிமாவை காப்பாற்றுவதில்லை என்றும் சினிமாவை அழிக்கவே அவர்கள் திட்டம் போட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் அரசியல்வாதிகள் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களுக்கு கூட்டாக செயல்படுகிறார்கள் என்ற சந்தேகம் உள்ளதாகவும், மக்களை திரட்டி இதுகுறித்து போராடினால் மட்டுமே அரசுக்கு சொரணை வரும் என்றும் ஆவேசமாக கூறினார். மேலும் தேர்தல் முடிவுக்கு பின்னர் மக்கள் அனைவரும் காவி வேட்டி கட்டிக்கொண்டு அலையப் போவதாகவும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், பாஜகவை மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார்.

இதனையடுத்து அவருடைய வீட்டிற்கு இன்று ஒரு பார்சல் வந்திருந்தது. பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி என்ற முகவரியில் இருந்து வந்திருந்த அந்த பார்சலில் ஒரு கடிதமும் ஒரு காவி வேட்டியும் இருந்தது. அந்த கடிதத்தில், 'முதல் தவணையாக காவி வேட்டி அனுப்பியுள்ளோம். இனி ஒவ்வொரு தவணையாக காவி வேட்டி அனுப்பிக் கொண்டே இருப்போம். ஏனென்றால், வாழ்நாள் முழுவதும் நீங்கள் காவி வேட்டியே அணிய வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது' என்ற எழுதப்பட்டுள்ளது.

More News

மகத்தான மாமனிதர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்

நடிகர், இசையமைப்பாளர் என இரண்டு துறைகளில் வெற்றிகரமாக பயணம் செய்து கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ், அவ்வப்போது சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.

மோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்! 

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் அபார வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்கவுள்ளார்.

கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடன் செய்த வினோத காரியம்!

அமெரிக்காவில் ஒரு வீட்டில் திருட வந்த திருடன் அந்த வீட்டையும், அந்த வீட்டில் உள்ள கழிவறையையும் சுத்தம் செய்துவிட்டு சென்றுள்ள வினோத நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்!

பிக்பாஸ் பிரபலமான ஹரிஷ் கல்யாண் நடித்த 'பியார் பிரேமா காதல்' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' ஆகிய இரண்டு படங்களும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது

ஆட்டோ டிரைவர்களுக்கு தளபதி விஜய் கொடுத்த விருந்து!

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1ஆம் தேதி ஆட்டோ டிரைவர்களுக்கு தளபதி விஜய் விருந்தளிப்பதை கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளார்