சோபியா ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: வழக்கறிஞர் சண்முகசுந்தரம்
- IndiaGlitz, [Tuesday,September 04 2018]
சோபியாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
சோபியா வழக்கில் காவல்துறையினர் சரியான பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்யவில்லை. அதுமட்டுமின்றி இந்திய விமான சட்டத்தின்படி விமானத்தில் பயணம் செய்யும்போது பயணிகள் தங்கள் இருக்கையில் இருந்து கூட எழுந்திருக்க கூடாது என்ற விதி உள்ளது. அது விமான பயணத்திற்கே இடையூறாக கருதப்படும். அப்படி இருக்கையில் விமானத்தின் உள்ளும், விமான நிலைய வளாகத்திற்குள்ளும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ள நிலையில் விமான நிலைய அதிகாரிகள் சரியான புகார் கொடுக்கவில்லை
மேலும் சோபியாவின் தந்தையிடம் நீதிமன்றம் 'மீண்டும் ஒருமுறை உங்கள் மகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தே ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஜாமீனை ரத்து செய்ய பாரதிய ஜனதா கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்