இதுவரை இல்லாத அளவிற்கு புது உச்சத்தைத் தொட்ட பிட்காயின் மதிப்பு!!!

  • IndiaGlitz, [Friday,December 18 2020]

 

உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாணய மதிப்பாக பிட்காயின் இருந்து வருகிறது. கண்களால் பார்க்கவோ, கையால் தொடவோ முடியாத இந்த நாணயத்தின் புழக்கம் சமீபகாலமாகத்தான் அதிகரித்து உள்ளது. கணினிக்கு ஏற்ற முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ள இந்த நாணய மதிப்பை வர்த்தகத்தில் பயன்படுத்தும் அளவு கொரோனா காலத்தில் மேலும் 64.6% ஆக அதிகரித்துவிட்டது. இந்தப் புழக்கத்தின் காரணமாகத் பிட்காயின் மதிப்பு கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது உச்சத்தை எட்டி இருக்கிறது.

பிட்காயின் மற்ற நாணயங்களான டாலர், பவுண்ட் மாதிரி இணைய பரிவர்த்தனைக்கு அதிகம் பயன்படுத்தப் படுகிறது. மேலும் எளிய பணப்பரிமாற்றமாகவும் இது இருந்து வருகிறது. ரகசியப் பரிமாற்றத்திற்கும் இது எளிதாக இருப்பதால் வர்த்தகத்துறையில் இதன் பயன்பாடு சமீபமாகக் கூடிவிட்டது என்றே சொல்லலாம்.

கடந்த மார்ச் மாதம் ஒரு பிட்காயின் மதிப்பு 5 ஆயிரம் டாலராக (ரூ.3 லட்சத்து 75 ஆயிரம்) இருந்தது. இந்நிலையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று முன்தினம் இதன் மதிப்பு அதிரடியாக 20 ஆயிரம் டாலராக சுமார் (ரூ.15 லட்சம்) உயர்ந்தது. இது பிட்காயின் மதிப்பில் புதிய உச்சம் எனக் கூறப்படுகிறது. நேற்று காலை 8.40 மணி நிலவரப்படி 22 ஆயிரத்து 120 டாலர்கள் (சுமார் ரூ.16 லட்சத்து 59 ஆயிரம்) ஆகும். 12 ஆண்டுகளில் பிட்காயின் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.