சுக்குநூறாக உடையும் மநீம?… நடிகர் கமல்தான் காரணமா? காரசாரமான வீடியோ விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மாற்றம் என்பதை வலியுறுத்தி கடந்த 2018 பிப்ரவரி மாதத்தில் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் துவங்கினார். இந்தக் கட்சிக்கு இளைஞர்கள் மற்றும் பல சினிமா பிரபலங்களும் ஆதரவு அளித்து இருந்தனர். அதோடு கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தக் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்று மக்கள் மத்தியில் உற்சாகத்தை வெளிப்படுத்தி இருந்தது.
இதையடுத்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இக்கட்சி போட்டியிடவில்லை. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டல மாநில பொதுச் செயலாளராகச் செயல்பட்டு வந்த நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் கட்சியில் இருந்து விலகினார். அதோடு புது உறுப்பினர்கள் பலரும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
மேலும் தற்போது நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி ஐஜேக, சமத்துவ மக்கள் கட்சி, எஸ்டிபிஐ போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தலா 40 தொகுதிகளை ஒதுக்கி போட்டியிட்டது. ஆனால் நடைபெற்று முடிந்த தேர்தலில் ஒரு தொகுதியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்து இருக்கிறது. அதோடு ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் பெற்றிருந்த வாக்கு சதவீதத்தையும் தற்போது இழந்து இருக்கிறது.
இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியில் இருந்து முக்கிய உறுப்பினர்கள் சிலர் விலகி உள்ளனர். அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன், பொதுச் செயலாளர் சந்தோஷ்பாபு, முருகானந்தம், நிர்வாகக்குழு உறுப்பினர் உமா தேவி, ஓய்வுப்பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான குமரவேல் மவுரியா, பொன்ராஜ், தங்கவேல், மற்றும் தேர்தல் வியூக அலுவலர் சுரேஷ் அய்யர் ஆகியோர் விலகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இப்படி கட்சியில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்தும் விலக்கப்பட்டு உள்ளனர். இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரே ஒரு தலைமை என்ற ஒரு இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் எதிர்காலம் குறித்தும் பலத்த சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இந்நிலைமைக்கு என்ன காரணம் என்பது குறித்தும் கட்சியின் எதிர்காலம் குறித்தும் விளக்கம் அளித்து அரசியல் விமர்சகர் பிஸ்மி அவர்கள் பிரத்யேக நேர்காணல் வழங்கியுள்ளார். இந்த நேர்காணல் தற்போது சமூக வலைத்தளங்களில் தனிக்கவனம் பெற்று இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments