சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'தில்லுக்கு துட்டு 2', 'ஏ1' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை இந்த ஆண்டு அவர் நடித்த ‘டகால்டி’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி தற்போது திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த நிலையில் அவர் நடித்த ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது சந்தானம் நடித்து வரும் படங்களில் ஒன்று இயக்குனர் கண்ணன் இயக்கி வரும் படம் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கிய 'ஜெயம் கொண்டான்', 'வந்தான் வென்றான்', 'சேட்டை போன்ற படங்களில் சந்தானம் காமெடி நடிகராக நடித்திருந்த நிலையில் தற்போது அவரது படத்தில் ஹீரோவாக சந்தானம் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் டைட்டில் ’பிஸ்கோத்’ என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ராதான் இசையில், சண்முக சுந்தரம் ஒளிப்பதிவில் ஆர்.கே.செல்வா படத்தொகுப்பில் ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சியில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
. @iamsanthanam ‘s next film TitleLook #Biskoth produced & Directed By @Dir_kannanR !!!
— MKRP PRODUCTIONS (@mkrpproductions) February 6, 2020
Get Ready to Taste a New Flavour :-) @masalapixweb @mkrpproductions @TaraAlishaBerry @shammysaga @tridentartsoffl @johnsoncinepro @shiyamjack pic.twitter.com/q4i0ng10lv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com