இளையதளபதியிடம் சர்ப்ரைஸ் பிறந்த நாள் வாழ்த்து பெற்ற பிரபல பாடகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
'நெருப்புடா' புகழ் பாடகர் அருண்காமராஜ் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு அவருடைய நண்பர்களும் குடும்பத்தினர்களும், திரையுலகினர்களும் நேரிலும், தொலைபேசியிலும், சமூக ஊடகங்கள் மூலமும் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை இளையதளபதி விஜய்யிடம் இருந்து ஒரு சர்ப்ரைஸ் கால் வந்ததாகவும், தனக்கு அவர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் அருண்காமராஜ் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். நான் மிகவும் மதிக்கும் ஒருவரிடம் இருந்து இந்த வாழ்த்து பெற்றதை பெரும் பாக்கியமாக கருதுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் நடித்த 'பைரவா' படத்தில் அருண்காமராஜ் 'வரலாம் வரலாம் வா' என்ற பாடலை பாடியுள்ளார் என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட்டாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com