இந்தியாவில் பீதியை கிளப்பும் பறவைக் காய்ச்சல்… கோழிக்கறி, முட்டையை சாப்பிடலாமா???

  • IndiaGlitz, [Monday,January 11 2021]

கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசத்தைத் தொடர்ந்து தற்போது டெல்லியிலும் பறவைக் காய்ச்சல் கடும் பீதியை கிளப்பி வருகிறது. டெல்லியில் கடந்த 9 ஆம் தேதி 200 க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்து விட்டதாகக் கால்நடைப் பராமரிப்புத் துறை தகவல் அளித்து உள்ளது. இதனால் H5N1 பறவைக் காய்ச்சல் தற்போது டெல்லியிலும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டதா என்பது குறித்த ஆய்வு தொடங்கி உள்ளது.

முதன் முதலாக ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 4 ஆம் தேதி 425 காகங்கள் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியது. அதையடுத்து தற்போது இந்தியா முழுவதும் இதுவரை 5 மாநிலங்களில் உள்ள 15 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பறவை இனங்களுக்கும் இந்தப் பறவைக் காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் காங்ரா மாவட்டத்தின் டேம் லேக் சரணாலயப் பகுதி முழுவதும் பறவைகள் இறந்து மயானம் போல காட்சித் தருக்கின்றன.

வட மாநிலங்களைத் தொடர்ந்து கடந்த வாரம் கேரளாவின் நீண்டூர், ஆலப்புழா எனும் இரு பகுதிகளில் உள்ள பல்வேறு பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தியது. H5N1 பாதிப்பினால் அப்பகுதியில் 12 ஆயிரம் பறவைகள் உயிரிழந்ததாகவும் 32 ஆயிரம் கோழி, வாத்து போன்ற வளர்ப்பு பிராணிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பறவைக் காய்ச்சல்- இந்தியாவில் கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்தே பறவை காய்ச்சல் நோய் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது H5N1 ஏவியன் ப்ளூ, இன்ப்ளூயன்சா ஏ, பறவைக் காய்ச்சல் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆண்டு தோறும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்நோய் கோழி மற்றும் டர்க்கி கோழி பறவை இனங்களில் மட்டுமே காணப்படுகிறது. இதில் உள்ள அனைத்து வைரஸ்களுமே பெரிய பாதிப்பை ஏற்படுத்து வதில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆனால் சில வைரஸ்கள் பறவை இனங்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது. இந்த கொடிய வைரஸ்கள் சீதோஷ்ண மாறுபாடுகளாலும் காட்டுப் பறவைகள் கண்டம் விட்டு கண்டம் புலம்பெயர்ந்து வரும் நேரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி விடுவதாகக் கூறப்படுகிறது. மேலும் புவி சார்ந்த மாற்றங்களாலும் இத்தொற்று சில நேரங்களில் பரவி விடுகிறது. இப்படி பரவும் தொற்றுகளால் பெரும்பாலும் காட்டுப் பறவைகள் பாதிக்கப் படுவதில்லை.

அனால் அந்தப் பறவைகள் இடம்பெயர்ந்து வரும்போது அவை கடந்து வரும் வழிகளில் அவை வெளியேற்றும் கழிவுகள் மூலம் வைஸும் வெளியேற்றப்படும். இதனால் உடனே தொற்ற வல்ல இந்த வைரகள் காற்றிலும் நீரிலும் மண்ணிலும் கலக்கின்றன. அதன் மூலம் அப்பகுதியில் வாழும் பறவைகளுக்கும் சிறிய வகை விலங்கு இனங்களுக்கும் பரவ வாய்ப்புண்டு. மேலும் வேறுபட்ட இனங்களுக்குள் இதுபோன்ற வைரஸின் செயல்பாடுகள் வெகுவாக மாறுபடுகிறது.

அதோடு H5N1 மரபணுவைக் கொண்ட வைரஸ் கொரோனாவைவிட அதிகமாக உருமாற்றம் அடையக் கூடியது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் கொரோனா பேல மனிதர்களிடத்தில் இருந்து மற்ற மனிதனுக்கு இது பரவாது என்று மருத்துவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால் பறவை இனங்களில் இருந்து மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வல்ல இந்த வைரஸ்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது.  

பொதுவாக பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ்கள் அதன்  தசைப் பகுதிகளில் பல மடங்காக பெருகி விடுகிறது. மேலும் கூட்டமாக வளர்க்கப்படும் பறவைகளில் ஒரு பறவைக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டாலும் அப்பறவையின் உமிழ்நீர், இறக்கை மற்றும் அவை வெளியேற்றும் கழிவுகள் வழியாக வைரஸ் வெளியேற்றப்பட்டு அடுத்தடுத்த பறவைகளுக்கும் தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாகி விடுகிறது. இந்த வகை தொற்று வேகமாகப் பரவுவதால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பறவைகளுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்துவது சாத்தியமில்லாமல் போகிறது.

எனவே பறவைக் காய்ச்சல் பரவும் காலங்களில் தொற்று ஏற்பட்ட பறவைகளையும் அவற்றுடன் சேர்ந்து வாழும் பிற பறவைகளையும் அதிகாரிகள் கொன்று விடுகின்றனர். ஆனால் சமைத்த கோழி இறைச்சி மற்றும் முட்டையைத் தாரளமாகச் சாப்பிடலாம். அதில் எந்தப் சிக்கலும் இல்லை என்று சுகாதாரத்துறை விளக்கம் அளிக்கிறது.

More News

நிஷா ராக்கிங்: இந்த பெர்ஃபார்மன்ஸை முதலிலேயே காட்டியிருக்கலாமே!

பிக்பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா ஆகியோர் சிறப்பு விருந்தாளியாக வந்திருக்கும் நிலையில் வீடே கோலாகலமாக உள்ளது. பிக்பாஸ் ஆரம்பித்த முதல் பத்து நாட்கள் நிஷா

கட்டுப்பாட்டுடன் நடந்த ரசிகர்களின் ஆர்ப்பாட்டம்: ரஜினிகாந்த் பாராட்டு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றும், அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றும், உடல்நிலை காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

ஈஸ்வரன் - மாநாடு: பொங்கலுக்கு இரட்டை விருந்து தரும் சிம்பு

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான 'ஈஸ்வரன்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே

மீண்டும் பிஸியாகும் நடிகர் ரஹ்மான்: கைவசம் இத்தனை படங்களா?

கடந்த 1986ஆம் ஆண்டு 'நிலவே மலரே' என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ரஹ்மான். இந்த படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் 'புதுப்புது அர்த்தங்கள்

62 பயணிகளுடன் மாயமான இந்தோனேஷிய விமானம் என்ன ஆனது? வெளியான பரபரப்பு தகவல்!!!

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் நேற்று திடீரென மாயமானது.