இந்தியாவில் அச்சுறுத்தலாக மாறிவரும் புதிய தொற்றுநோய்… மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா???

  • IndiaGlitz, [Tuesday,January 05 2021]

 

கொரோனாவிற்கு நடுவில் இந்தியாவில் புதிய தொற்று நோய் ஒன்று அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேசம், கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் புதிய தொற்று குறித்த பாதுகாப்பு அறிவிப்பை மாநில அரசாங்கள் ஏற்படுத்தி வருகின்றன. ‘

முதலில் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி முதல் ஜனவரி 3 ஆம் தேதிவரை மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் 142 காகங்கள் உயிரிழந்தன. இதற்கு காரணம் H5N8 எனப்படும் ஒருவகை பறவைக் காய்ச்சல் நோய் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா எனப்படும் இப்புதிய தொற்றுநோய் மனிதர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இதுவரை இந்தப் புதிய தொற்று நோயால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்ற சுகாதாரத்துறை கூறி உள்ளது.

மத்தியப் பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேசம், கேரளாவிலும் இப்புதிய தொற்று நோய் பாதிப்பு இருப்பதை அம்மாநில அரசாங்கள் தற்போது உறுதிப்படுத்தி இருக்கின்றன. ஆனால் இந்த இடங்களில் மனிதர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் மற்ற பறவை இனங்களுக்கும் இப்புதிய தொற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சுகாதாரத்துறை தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இமாச்சல் பிரதேசத்தில் 2500 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இப்புதிய தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதேபோல ராஜஸ்தானின் ஜலவர் பகுதியில் கடந்த வாரம் 250 க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்தன. இந்த உயிரிப்புக்கும் H5N8 தொற்றே காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அடுத்து மத்தியப் பிரதேசத்தின் அகார் மால்வா, மாண்ட்சூர், கார்கோன் மற்றும் டேலி போன்ற இடங்களில் காகம் மற்றும் மயில் இனங்கள் இப்புதிய தொற்று நோயால் இறந்துள்ளன.

மேலும் அம்மாநிலத்தின் இந்தூரில் மட்டும் 250 க்கும் மேற்பட்ட காகங்கள் இப்புதிய நோயால் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயத்தில் தற்போது வாத்து மற்றும் கோழிகள் திடீரென கொத்து கொத்தாக செத்து மடிந்துள்ளன. இதன் மாதிரிகள் சோதிக்கப்பட்டபோது H5N8 வைரஸ் காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த இருமாவட்டங்களிலும் H5N8 வைரஸ் பாதிப்பினால் இதுவரை 12 ஆயிரம் வாத்து மற்றும் கோழிகள் உயிரிழந்ததாக அம்மாநில அரசு உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக 36 ஆயிரம் வாத்து மற்றும் கோழிகள் கொல்லப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் குளோரின் டை-ஆக்ஸைடு தெளிக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் கேரளாவில் இருந்து கோழி, வாத்து போன்ற இறைச்சிக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கேரளாவின் பல்வேறு இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தி விட்ட H5N8 வைரஸ் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வில்லை என்றே கேரளா சுகாதாரத்துறை குறிப்பிட்டு உள்ளது. இந்நிலையில் இமாச்சல், கேரளா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானை அடுத்து மற்ற மாநிலங்களுக்கும் இப்புதிய தொற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துமா அல்லது மனிதர்களுக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடுமா என்ற அச்சமும் ஏற்பட்டு உள்ளது.

More News

இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவாரா பாலாஜி?

கடந்த வாரம் முழுவதும் பாலாஜி சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தார் என்பதும் கமல்ஹாசனும் அவரை இரண்டு நாட்களும் கண்டித்தார் என்பதும் தெரிந்ததே.

நீ ஆம்பள பையன் தானே: பாலாஜியை கோபப்பட வைத்த ஆரி கேள்வி

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார் என்பதும் அது மட்டுமின்றி இந்த வாரம் நாமினேஷனில்

டெஸ்ட் போட்டிக்கான வெள்ளை நிற ஜெர்சியில் நடராஜன்… வைரல் புகைப்படம்!!!

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெற இருக்கிறார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது

விடுமுறை மாதமாக மாறும் ஜனவரி: மேலும் ஒருநாள் விடுமுறை என அறிவிப்பு!

மதரீதியில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளுக்கு தமிழக அரசு ஏற்கனவே விடுமுறை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்பட பல பண்டிகைகளுக்கு

நான் லேடி விஜய்சேதுபதியாக விரும்புகிறேன்: பிரபல நடிகை பேட்டி!

தினேஷ் நடித்த 'ஒரு நாள் கூத்து' என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அதன்பின்னர் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'பொதுவாக என் மனசு தங்கம்' ஜெயம் ரவி நடித்த 'டிக் டிக் டிக்'