பாடாய் படுத்தி வரும் கொரோனாவுக்கு மத்தியில் பறவைக் காய்ச்சலா??? 

  • IndiaGlitz, [Tuesday,March 10 2020]

இந்தியாவில் கொரோனா தொற்று 42 ஆக அதிகரித்து இருக்கிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த இந்திய சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கி இருப்பது கடும் அச்சத்தை வரவழைத்து இருக்கிறது. 

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பல பண்ணைகளில் கோழிகள் திடீரென கொத்துக் கொத்தாக மடிந்து விழுந்தன. இதையடுத்து அம்மாநில கால்நடை பராமரிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது அக்கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப் பட்டது. எனவே பறவைக் காய்ச்சலைக் கடுப்படுத்தும் நடவடிக்கைகளில் கேரள அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. உயிரிழந்த கோழிகளை அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 

பறவை காய்ச்சல் அபாயத்தை அடுத்து தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது படிந்தாலுமூடு பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் தமிழக கால்நடை பராமரிப்பு துறை கிருமிநாசினி மருந்துகளை தெளித்து வருகிறது. மேலும, கோழி கழிவுகளை ஏற்றிவரும் கேரள வாகனங்கள் திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. 
 

More News

ஒரே வருடத்தில் ஆறு படங்களை ரிலீஸ் செய்யும் சந்தானம்? 

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த நடிகர் சந்தானம் ஒரே வருடத்தில் 10 முதல் 15  படங்களுக்கு மேல் நடித்து வந்தார். ஒவ்வொரு வாரமும் அவர் நடித்த படங்கள் ரிலீசாகி வந்தன

மீண்டும் வரலாற்று திரைப்படத்தில் நடிக்கிறாரா நயன்தாரா?

சமீபத்தில் சிரஞ்சீவி நடித்த 'சயிர நரசிம்ம ரெட்டி' என்ற வரலாற்று திரைப்படத்தில் நடித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீண்டும் ஒரு வரலாற்று திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

கமலஹாசன் நடிக்கும் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்: பரபரப்பு தகவல்

உலகநாயகன் கமலஹாசன் ஏற்கனவே 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன் 2' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும்

CAA சட்டத்திற்கான விவாதத்தில் தெலுங்கானா முதல்வர் என்ன சொன்னார் தெரியுமா..?!

இது போன்ற சட்டங்கள் எரிச்சலை வரவைக்கின்றன. இதனால் இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் குறைகிறது.

கோவையில் கொரோனா அறிகுறிகளுடன் 3 பேர் அனுமதி..!

கோவையில் வெளிநாடுகளில் இருந்து வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டதனால் அவர்கள் தனிமையில் வைக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர்.