பாடாய் படுத்தி வரும் கொரோனாவுக்கு மத்தியில் பறவைக் காய்ச்சலா???
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கொரோனா தொற்று 42 ஆக அதிகரித்து இருக்கிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த இந்திய சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கி இருப்பது கடும் அச்சத்தை வரவழைத்து இருக்கிறது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பல பண்ணைகளில் கோழிகள் திடீரென கொத்துக் கொத்தாக மடிந்து விழுந்தன. இதையடுத்து அம்மாநில கால்நடை பராமரிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது அக்கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப் பட்டது. எனவே பறவைக் காய்ச்சலைக் கடுப்படுத்தும் நடவடிக்கைகளில் கேரள அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. உயிரிழந்த கோழிகளை அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
பறவை காய்ச்சல் அபாயத்தை அடுத்து தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது படிந்தாலுமூடு பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் தமிழக கால்நடை பராமரிப்பு துறை கிருமிநாசினி மருந்துகளை தெளித்து வருகிறது. மேலும, கோழி கழிவுகளை ஏற்றிவரும் கேரள வாகனங்கள் திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout