கர்ப்பிணி போட்டோஷூட்டில் இவ்வளவு கிளாமரா? விஜய் பட நடிகை மீது ரசிகர்கள் அதிருப்தி!

  • IndiaGlitz, [Tuesday,August 16 2022]

விஜய் படத்தில் நடித்த நடிகையும் பிரபல பாலிவுட் நடிகையுமான பிபாஷா பாசு கர்ப்பிணி நேரத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அளவுக்கு அதிகமான கிளாமர் காரணமாக நெட்டிசன்கள் அவர்மீது அதிருப்தியில் கமெண்ட்ஸ் பதிவு செய்துவருகின்றனர்.

விஜய் நடித்த ‘சச்சின்’ என்ற திரைப்படத்தில் நடித்தவரும், பிரபல பாலிவுட் நடிகையாக இருந்தவருமான நடிகை பிபாஷா பாசு பல சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை பிபாஷா பாசு கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கரண் சிங் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து சமீபத்தில் பிபாஷா பாசு கர்ப்பமான நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் அளவுக்கு அதிகமான கிளாமராகவும் ஆபாசத்தின் உச்ச கட்டமாக இருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். கலாச்சாரத்தை சீரழிக்கும் இதுபோன்று போட்டோஷூட் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு சிலர் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் இந்த கிளாமர் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.