விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

  • IndiaGlitz, [Monday,April 02 2018]

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனைபற்றி தெரியாத தமிழர்கள் இருக்க முடியாது தனி ஈழம் பெற போராடிய இவர் இலங்கை தமிழர்கள் மத்தியில் மட்டுமின்றி உலக தமிழர்களின் ஹீரோவாக புகழப்பட்டவர். கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் பிரகாரன் மரணம் அடைந்ததாக இலங்கை அரசு அறிவித்தது

இந்த நிலையில் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படம் எடுக்க ஸ்டுடியோ 18 என்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே 'உனக்குள் நான்', 'லைட்மேன், மற்றும் 'நீலம்' ஆகிய படங்களை தயாரித்துள்ளது. இதில் நீலம்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் தர மறுத்துவிட்டதால் இந்த படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கடேஷ்குமார் என்பவர் இயக்கவுள்ள 'பிரபாகரன்' வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் தமிழ் நடிகையின் நிர்வாண வீடியோ

2002ஆம் ஆண்டு வெளிவந்த 'யுனிவர்சிட்டி' என்ற ஒரே தமிழ் படத்தில் நடித்த நடிகை ஷெர்லின் சோப்ரா, சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்தவர்

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்தவர் ராதிகாரெட்டி. இவர் நேற்றிரவு ஐதராபாத்தில் திடீரென தனது ஐந்தாவது மாடி வீட்டில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மிஸ் இந்தியா அழகியுடன் டேட்டிங் செல்லும் அஜித்-விஜய் பட நடிகர்

அஜித் நடித்த 'மங்காத்தா' மற்றும் விஜய் நடித்த 'ஜில்லா' ஆகிய படங்கள் உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகர் மகத். இவர் வெங்கட்பிரபுவின் அனைத்து படங்களிலும் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் வரலாறு காணாத விலையுயர்வில் பெட்ரோல்-டீசல்

கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து கொண்டே இருப்பதால் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

சமந்தாவின் 'ரங்கஸ்தலம்' சென்னை வசூல் எப்படி?

கோலிவுட் திரையுலகம் கடந்த ஒரு மாதமாக வேலைநிறுத்தம் செய்து வருவதால் சினிமா ரசிகர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில் கடந்த வெள்ளியன்று சமந்தா நடித்த 'ரங்கஸ்தலம்' திரைப்படம் ஒரு ஆறுதலாக இருந்தது.