கோலிவுட் ஸ்டிரைக் எதிரொலி: ஆடு மேய்க்க போன பிரபல தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Thursday,April 05 2018]

கோலிவுட் திரையுலகம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் இருப்பதால் பெரிய நடிகர், நடிகைகள் முதல் சின்ன நடிகர், நடிகைகள் வரை வீட்டில் ஓய்வு எடுத்தும், வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாவுக்கும் சென்று வருகின்றனர். அந்த வகையில் பிரபல தமிழ் நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவருமான பிந்துமாதவி, ஆந்திராவில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்று ஆடுமேய்த்து வருகிறார். இதனை அவர் தனது சமூக  வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் உள்ள தனது சொந்த ஊரான தேவரிந்துபள்ளிக்கு சென்றுள்ளதாக பதிவு செய்து செய்துள்ள பிந்துமாதவி, அங்கு ஆடு மேய்ப்பது, மண்பானையில் சமைத்து சாப்பிடுவது, குல தெய்வ கோவிலுக்கு நடந்து சென்று வழிபடுவது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளாராம்.

மேலும் இதுகுறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள பிந்துமாதவி, நகரத்தில் இருந்து கிராமம் வந்து பொழுதை கழிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

More News

இந்திய சினிமாவில் விஜய் தான் பெஸ்ட்: சிவகார்த்திகேயன் கூறும் காரணம் என்ன தெரியுமா?

குறுகிய காலத்தில் மக்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி கொண்ட சிவகார்த்திகேயன்

தங்க மங்கை மீராபாய் செய்த காமன்வெல்த் சாதனைகள்ல்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் பெற்று தந்த தங்க மங்கை மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கமல்ஹாசனை ஷகிலாவுடன் ஒப்பிட்டு விமர்சித்த டி.ஆர்.

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள நடிகர் கமல்ஹாசனை திரையுலகில் உள்ள ஒருசிலரே கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்

அஜித், விஜய் குறித்து டிவி நடிகை கூறிய மாஸ் பதில்

சின்னத்திரை, பெரிய திரை என எந்த நட்சத்திரமாக இருந்தாலும் மீடியாக்களுக்கு பேட்டியளிக்கும்போது கோலிவுட் திரையுலகின் மாஸ் நடிகர்களான அஜித், விஜய் குறித்து பேசாமல் அந்த பேட்டி முழுமை அடையாது.

சல்மான்கானுக்கு என்ன தண்டனை! நீதிபதியின் அதிரடி தீர்ப்பு

கடந்த 1998ஆம் ஆண்டு அரிய வகை கருப்பு நிற மான்களை வேட்டையாடியதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் சல்மான்கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார் எ