நீயெல்லாம் தலைவியா? காயத்ரியை கதிகலங்க வைத்த பிந்துவின் கேள்விகள்!

  • IndiaGlitz, [Tuesday,August 01 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பங்கேற்பாளர்களில் குள்ளநரித்தனம் செய்பவர்கள், பொய்யை மட்டுமே முதலீடாக வைத்துள்ளவர்கள், பெண்களுக்கு நிகராக புரணி பேசும் ஆண்கள் என அனைவரும் இருக்கும் நிலையில் அப்பாவி பரணியை கார்னர் செய்து வெளியேற்றியது கொடுமையிலும் கொடுமை என பார்வையாளர்கள் மத்தியில் இன்றும் அனுதாபம் இருந்து வருகிறது. பரணி வெளியே போகும்போது கமல்ஹாசனிடம் பேசிய தெளிவான பேச்சு உள்ளே இருப்பவர்களின் கொடூர மனங்களை அனைவருக்கும் தெள்ளத்தெளிவாக புரிய வைத்தது.

இந்த நிலையில் இதுவரை பார்வையாளர்களின் ஒருவராக இருந்த பிந்துமாதவி, தற்போது உள்ளே சென்று பார்வையாளர்களின் ஒட்டுமொத்த குரலாக காயத்ரியை கேள்விகளால் துளைத்து எடுத்தார். சற்று முன் வெளியான புரமோ வீடியோவில், 'பரணி சுவரேறி வெளியே குதிக்க முயற்சிக்கையில் ஏன் யாருமே தடுக்கவில்லை என்ற கேள்வியை காயத்ரியிடம் பிந்துமாதவி கேட்டார்.

அதற்கு காயத்ரி, 'பரணி வேண்டுமென்றே ஒரு பிரச்சனையை கிரியேட் செய்ததாக கூறினார். ஆனால் அவர் முடிக்கும் முன்பே 'பரணி வெளியே போக முயற்சி செய்ததற்கு உண்மையான காரணம், நீங்கள் அனைவரும் அவரை கார்னர் செய்ததுதான் என்று கூறிவிட்டு பின்னர் 'அந்த நேரத்தில் யார் தலைவர்' என்ற கேள்வியை பிந்து கேட்க, அதற்கு காயத்ரி 'நான் தான்' என்று கூறினார். அப்போது, 'ஒரு தலைவராக நீங்கள் ஏன் அவரை தடுக்கவில்லை' என்று கதிகலங்க வைக்கும் கேள்வியை கேட்க, காயத்ரி பதில் சொல்ல முடியாமல் திணறினார். இந்த வீடியோ காயத்ரியை வெறுக்கும் பார்வையாளர்கள் அனைவருக்கும் ஒரு விருந்தாக அமைந்துள்ளது. மேலும் பிந்துமாதவியின் முழு கேள்விகளையும் பார்க்க இன்று அனைவரும் தயாராக இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

More News

Madhur Bhandarkar: I've only heard positive reviews for 'Indu Sarkar'

Madhur Bhandarkar's latest controversial drama "Indu Sarkar" has registered earnings of over Rs 4 crore at the box office in its opening weekend and has received mixed reviews from critics. But the filmmaker says his spirit is neither dampened by the collections nor by the feedback.

John Abraham: People must realise movies are fictional, not real

Actor John Abraham, who is actively involved in spreading awareness about social issues in India, says people need to realise that films are fictional and not real, and realise where to draw the line when it comes to imbibing some facts.

Body double case: Kerala Police seek uncensored copy of Honey Bee 2

As reported earlier, a young actress had filed a case against 'Honey Bee 2' director Jean Paul Lal and actor Sreenath Bhasi and technician...

Ajeeb dastaan hai yeh: The tragedies of Meena Kumari's life, work and verse

Termed the "Tragedy Queen" of Bollywood for her immortal, iconic portrayals of a varied gamut of wronged, silent and long-suffering but dignified Indian women from passed-over love interests to neglected wives, Meena Kumari was however a most unfortunate actress whose grief did not end when the shooting was done.

Prithviraj signs a mega budget period film - shooting details revealed

After a gap of four years, veteran director Viji Thampy is once again wearing the director’s cap. The director will be doing a mega budget...