பிக்பாஸில் பிந்துமாதவி! ஓவியாவுக்கு இனிமேல்தான் போட்டியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரெகுலராக பார்த்து கொண்டு வருபவர்களிடம் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கேட்டால் உடனே யோசிக்காமல் ஓவியாவின் பெயரை கூறி விடுவார்கள். இந்த நிகழ்ச்சியின் மற்ற பங்கேற்பாளர்களுக்கும் ஓவியாவுக்கும் இடையே போட்டியே இல்லாதது போல்தான் உள்ளது.
ஒருநாள் முழுவதும் ஃபெர்மான்ஸ் செய்து அசத்த மற்ற பங்கேற்பாளர்கள் முயற்சிக்கும்போது ஓவியாவின் ஒரே ஒரு புன்னகைக்கு கிடைக்கும் பாராட்டு அதை பின்னுக்கு தள்ளிவிடுகிறது.
இந்த நிலையில் ஓவியாவுக்கு கடும்போட்டியை கொடுக்கவே நேற்று பிந்துமாதவி களத்தில் இறக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எதிர்பார்த்ததைபோலவே பிந்துமாதவி களத்தில் இறங்கிய மறுநிமிடமே டுவிட்டரில் பிந்து ஆர்மி தொடங்கப்பட்டுவிட்டது. இனி ஓவியா ஆர்மிக்கும் பிந்து ஆர்மிக்கும் இடையே நடைபெறும் கருத்துமோதல்கள் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓவியா-பிந்து போட்டியில் மற்ற பங்கேற்பாளர்கள் காணாமல் போய்விடுவார்களா? அல்லது அவர்களும் ஏதாவது வித்தியாசமான முயற்சியில் ஈடுபடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com