முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளிய சாதாரண McDonald’s ஊழியர்!
- IndiaGlitz, [Wednesday,January 12 2022]
தெற்காசிய அளவில் முன்னணி பணக்காரராக இருந்துவரும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. லண்டனைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவிலும் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் முகேஷ் அம்பானியை பின்னுத்தள்ளிவிட்டு முன்னாள் McDonald’s ஊழியர் ஒருவர் தெற்காசிய அளவில் முன்னணி பணக்காரராக மாறியுள்ளார் எனும் தகவல் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சீனாவைச் சேர்ந்த சங்ப்பெங்சாவோ (Changpeng Zhao) என்பவரின் சொத்து மதிப்பு முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பை விட அதிகரித்து இருப்பதாகக் கணிக்கப்பட்டு உள்ளது. வறுமை காரணமாக தனது 12 வயதில் பெற்றோருடன் கனடாவிற்கு குடிபெயர்ந்த சங்ப்பெங்சாவோ தனது இளமைக் காலத்தில் McDonald’s உணவகத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார்.
மேலும் கணினி அறிவியல் பட்டம் படித்த சாவோ ஒருகட்டத்தில் மென்பொருள் கட்டமைப்பாளராக பணியாற்றத் துவங்கியுள்ளார். இதுவே பின்னாட்களில் கிரிப்டோ கரன்சி குறித்த வேலைகளுக்கு அவரை இழுத்துச் சென்றிருக்கிறது. இதனால் கிரிப்டே கரன்சி பரிமாற்ற துறைகளில் வேலைப்பார்த்து சாவோ கடந்த 2007 இல் கிரிப்டோ கரன்சி எக்சேஞ்ச் செய்யும் பிசினஸ் எனும் நிறுவனத்தைத் துவக்கியிருக்கிறார்.
இதனால் 44 வயதான சாவோ தற்போது தெற்காசிய அளவில் தற்போது முன்னணி பணக்காரர் எனும் அளவிற்கு அவர் உயர்ந்து இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 96 பில்லியன் அமெரிக்க டாலர் எனக் கணிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 92.9 பில்லியன் அமெரிக்கன் டாலராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. வறுமையின் பிடியில் இருந்து தற்போது சாதனை படிகளில் ஏறிவரும் சாவோவைப் பார்த்து பல இளைஞர்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.