கொரோனா பாதிப்புக்கு பலியான மற்றொரு திரையுலக பிரமுகர்!

  • IndiaGlitz, [Friday,May 21 2021]

தமிழகத்தை கடந்த சில மாதங்களாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் அப்பாவி பொது மக்களை மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரையும் பாதித்து வருகிறது என்பதும், கே.வி.ஆனந்த், தாமிரா, நிதிஷ் வீரா உள்பட ஒரு சிலரின் உயிரையும் பலி வாங்கி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு இன்று மேலும் ஒருவர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆர்கே சுரேஷ் நடித்த ’பில்லா பாண்டி’ என்ற படத்தில் எழுத்தாளர் எம்.எம்.எஸ் மூர்த்தி என்பவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் எழுத்தாளர் எம்.எம்.எஸ் மூர்த்தி அவர்களின் மறைவுக்கு ஆர்கே சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளார். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உங்களை உயிருள்ளவரை மறக்க மாட்டேன்: பொன்னம்பலம் வெளியிட்ட உருக்கமான வீடியோ!

தமிழ் திரை உலகின் வில்லன் மற்றும் குணசித்திர நடிகரான பொன்னம்பலம் கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

4- வது காதலனை ரூம்பில் பூட்டி சித்ரவதை செய்த  ஏட்டு சந்தியா....! கண்ணீருடன் காவலில் புகாரளித்த கணவன்...!

ஏட்டு சந்தியா ராணி தன்னுடைய 4-வது கணவரை அறையில் பூட்டி வைத்து, டார்ச்சர் செய்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடலாசிரியர் சினேகனுக்கு விரைவில் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

பாடலாசிரியர், நடிகர் மற்றும் அரசியல்வாதி சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டுக்கு கொஞ்சி விளையாடும் ஐஸ்வர்யா ராஜேஷ்: யாருடன் தெரியுமா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் திரைப்பட படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

பிரபல மக்கள் தொடர்பாளரின் தாயார் கொரோனாவுக்கு பலி: உருக்கமான பதிவு!

தமிழ் திரையுலகின் பிரபல மக்கள் தொடர்பாளர் ஒருவரின் தாயார் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து அவர் உருக்கமாக தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது