அஜித் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இணையும் யுவன்ஷங்கர் ராஜா

  • IndiaGlitz, [Wednesday,April 18 2018]

ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி தல அஜித் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த ஆண்டும் ஒரு மாதத்திற்கு முன்பே அஜித் பிறந்த நாள் கவுண்ட் டவுனை சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர் அவரது ரசிகர்கள்

இந்த நிலையில் ஆர்.கே.சுரேஷ் நடித்த 'பில்லா பாண்டி' படத்தில் இடம்பெற்ற ' எங்க குல தங்கம் , எங்க தல சிங்கம் என்ற பாடலை சிங்கிள் டிராக்காக அஜித் பிறந்த நாளில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த பாடலை அன்றைய தினம் பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட ஒப்புகொண்டுள்ளார். இதன்மூலம் அவரும் அஜித் பிறந்த நாள் கொண்டாடத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆர்.கே.சுரேஷ் , சாந்தினி , இந்துஜா , தம்பிராமையா , மாரிமுத்து , அமுதவானன் , மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி , மாஸ்டர் தர்மேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் கே.சி பிரபாத் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் . தல ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை ராஜ் சேதுபதி என்பவர் இயக்கியுள்ளார். இளையவன் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ஜே.கே பிலிம் புரடொக்சன்ஸ் மற்றும் குளோபல் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. 

More News

ஐபிஎல் போன்று பட வெளியீடும் நிறுத்தப்படுமா? பிரபல நடிகர் கேள்வி

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன.

பெண் நிருபரின் கன்னத்தை தட்டிய கவர்னர்: பெரும் பரபரப்பு

நிர்மலாதேவி விவகாரத்தில் தன்னுடைய பெயர் அடிபடுவதை அடுத்து நேற்று மாலை இதுகுறித்து விளக்கம் அளிக்க தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களை சந்தித்தார்

நிர்மலாதேவியை கைது செய்தது எப்படி?

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்த கணித பேராசிரியை நிர்மலாதேவி, அந்த கல்லூரியில் படித்து வந்த 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

நிர்மலாதேவியை நான் நேரில் கூட பார்த்ததில்லை: கவர்னர் பேட்டி

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி ஒன்றில் கணித பேராசிரியையாக பணிபுரிந்து வந்த நிர்மலாதேவி

ஆசிபா கொடுமை குறித்து விஜய்சேதுபதி கூறியது என்ன தெரியுமா?

காஷ்மீர் மாநிலத்தில் ஆசிபாவுக்கு நடந்த கொடுமையால் இந்தியாவே அதிர்ச்சியில் உள்ளது அதைவிட இந்த கொடூர குற்றவாளிகளுக்கு ஒருசிலர் ஆதரவாக பேசி வருவது அதிர்ச்சியாகவும் அசிங்கமாகவும் உள்ளது.