'குட் பேட் அக்லி' படத்தில் 'பில்லா' நடிகர்? 14 வருடங்களுக்கு பின் மீண்டும் அஜித் படத்தில்..!

  • IndiaGlitz, [Friday,October 04 2024]

அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘பில்லா’ படத்தில் நடித்த முக்கிய நடிகர் 'குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்துள்ளார். 14 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் அவர் அஜித் உடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

நேற்று, இந்த படத்தில் நடிகர் பிரசன்னா இணைந்ததாக, அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த கட்டமாக, இந்த படத்தில் நடிகர் பிரபு நடிக்க இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது.

அஜித் நடித்த ’பில்லா’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்த பிரபு, அதன் பின்னர், அவர் தயாரித்த ’அசல்’ என்ற படத்தில் அஜித்துடன் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, 14 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மீண்டும் அஜித் படத்தில் பிரபு நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் இணையும் நட்சத்திரங்கள், இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ள நிலையில், இன்னும் யாரெல்லாம் இந்த படத்தில் இணைகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

More News

சிங்கம் சிங்கிளா வருது.. இந்த வாரம் ஒரே ஒரு தமிழ் படம்: ஓடிடி ரிலீஸ் தகவல்..!

ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளங்களில் இரண்டு அல்லது மூன்று தமிழ் படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் தளபதி விஜய் நடித்த 'கோட்'

'சட்டம் என் கையில்' இனி உங்கள் கையில்.. சதீஷ் வெளியிட்ட வீடியோ..!

நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்த "சட்டம் என் கையில்" என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையில், இன்று முதல் கூடுதல்

விஜய் அணிந்த 'கோட்' மோதிரம்.. பரிசாக கொடுத்தது யார்?

தளபதி விஜய் தனது சமூக வலைத்தளத்தில் "கோட்" என்ற எழுத்துக்களைக் கொண்ட மோதிரத்தை அணிந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

டிஸ்சார்ஜ் ஆன ரஜினிகாந்த் வெளியிட்ட அறிவிப்பு.. என்ன சொல்லியிருக்கிறார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் தொகுப்பாளர் விஜய் சேதுபதிக்கு எத்தனை கோடி சம்பளம்? ஆச்சரிய தகவல்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி நாளை மறுநாள் தொடங்க இருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்தது.