பில்கேட்ஸ் வீழ்ச்சிக்கு ஒரு பெண் காரணமா? பரபரப்பை கிளப்பும் தகவல்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகின் டாப் 10 பணக்காரர்களுள் ஒருவர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சொந்தக்காரர், மிகப்பெரிய நன்கொடையாளர், தனது மனைவி மெலிண்டாவுடன் இணைந்து அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூகநல விஷயங்களை முன்னெடுத்தவர் இப்படி பல பெருமைக்குச் சொந்தக்காரரான பில்கேட்ஸின் வீழ்ச்சிக்கு ஒரு பெண்தான் காரணம் என்று வால்ட் ஸ்ட்ரீக் பத்திரிக்கை தகவல் வெளியிட்டு இருக்கிறது.
125 பில்லியன் டாலர் சொத்துமதிப்பு கொண்ட பில்கேட்ஸ் கடந்த மே 3 ஆம் தேதி தனது மனைவி மெலிண்டாவை விட்டு பிரிந்தார். இதனால் 27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவிற்கு வந்தது. இந்த விவாகரத்துக் குறித்து கருத்து தெரிவித்த சில பத்திரிக்கைகள் வரியைக் குறைக்கத்தான் இப்படி செய்கிறார் என்றும் பரபரப்பை கிளப்பின.
ஆனால் தற்போது கடந்த 2008 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவருக்கு பில்கேட்ஸ் தகாத முறையில் மெயில் அனுப்பியதாகவும் இதுகுறித்து அப்போதே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாகக்குழு அவரை கண்டித்ததாகவும் வால்ட் ஸ்ட்ரீட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது. இதைத்தவிர அந்தப் பெண்ணுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பில்கேட்ஸ்க்கு தொடர்பு இருந்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பில்கேட்ஸ் அப்போதே மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் இனிமேல் இப்படி நடக்காது என்று கூறியதாகவும் தகவல் சொல்லப்படுகிறது. மேலும் இந்தச் சம்பவத்தையடுத்து பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல்தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொண்டார். பின்னர் 2020 ஆம் ஆண்டு மார்ச்சில் இருந்து அவர் அந்நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்தும் விலகிவிட்டார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர் தற்போது பணக்காரர் பட்டியலில் இருந்து தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறார். அதோடு 27 வருட குடும்ப வாழ்க்கையைவிட்டு பிரிந்து இருக்கிறார். இத்தனை சரிவிற்கும் ஒரு பெண்தான் காரணம் என்று வால்ட் ஸ்ட்ரீட் பத்திரிக்கை குறிப்பிட்டு இருக்கிறது. இந்தத் தகவலை AFB பத்திரிக்கையும் உறுதிச் செய்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com