கடும் சர்ச்சையில் கொரோனா நிவாரண நிதியை வாரிக்கொடுத்த பில்கேட்ஸ்!!! காரணம் என்ன???
Send us your feedback to audioarticles@vaarta.com
பேஃர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கும் தரவுகளின் படி உலகில் அதிக கொரோனா நன்கொடை நிதியை வழங்கிய இரண்டாவது நபர் பில்கேட்ஸ். உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருந்துவரும் பில் கேட்ஸின்பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பாக 225 மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா நிவாரண நிதியாக 100 மில்லியன் டாலர்களும் கொரோனா தடுப்பூசி ஆய்வுகளுக்காக 150 மில்லியன் டாலர்களையும் வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நண்பரும் அரசியல் பரப்புரையாளருமான ரோஜர் ஸ்டோன் பில்கேட்ஸின் நன்கொடை பற்றியும் கொரோனா தடுப்பூசி குறித்து அவர் நடத்தி வரும் ஆய்வுகள் குறித்தும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார். கொரோனா வைரஸ் பரவலுக்கு பில் கேட்ஸ் கூட காரணமாக இருக்கலாம். கொரோனா நிவாரண நிதி கொடுக்கிறேன் என்கிற பேர் வழியில், அவர் அப்பாவி மக்களின் கைகளில் மைக்ரோசிப் களை பொருத்தி ஆய்வுகளை மேற்கொள்ளும் நிலையும் ஏற்படலாம் எனப் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை கடந்த வாரத்தில் தெரிவித்து இருந்தார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் இருந்து உருவாக்கப் பட்டு இருக்கலாம், சீனா இதை வேண்டுமென்றே பரப்பி இருக்கலாம், இது குறித்து முழுமையான விசாரணை தேவை எனறு வெளிப்படையாக கூறியிருந்தார். அதோடு நிறுத்தாமல் தேசிய உளவுத் துறையை கொண்டு விசாரணை நடவடிக்கையையும் மேற்கொண்டார். அந்த உளவுத் துறை, ஆய்வகத்தில் இருந்து உருவாக்கப் பட்டதல்ல கொரோனா வைரஸ் என்பதை தெளிவு படுத்தியது. இருந்தாலும் கொரோனா வைரஸின் புகலிடம் சீனா தான். எனவே சீனாவை வெறுக்கிறேன். சீனாவோடு அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ளவும் என்னால் முடியும் எனவும் அச்சமூட்டும் பல கருத்துகளை நேற்று கூறியிருந்தார்.
இந்தப் பின்னணியில் தான் பில்கேட்ஸின் விவகாரம் சூடிபிடித்து இருக்கிறது. கொரோனா பரவலைப் பற்றி ஆளாளுக்கு புதுப்புது கருத்துகளை கூறிவரும் நிலையில் பில் கேட்ஸ் “மைக்ரோசிப்” கருவிகளை பொதுமக்களின் கைகளில் பொருத்தி ஆய்வு செய்யப் போகிறார் என்ற கருத்தும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலகின் பெரும் பணக்காரரர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பதவியை துறந்து விட்டு ஆப்பிரிக்க நாடுகளில் நோய்த்தொற்றுக்கு எதிரான பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வரும் சமூக ஆர்வலர். ஒவ்வொரு நோய்ப் பரவலின்போது அதிக நன்கொடையை வாரிக்கொடுக்கும் தாராளவாதி. பல நோய்களுக்கு எதிராக தடுப்பூசி ஆய்வுகளை செய்து வருபவர் எனப் பல முனைகளில் பாராட்டுகளை பெற்று வரும் பில் கேட்ஸை பற்றித்தான் தற்போது மாற்றுக் கருத்துகளும் வைக்கப் படுகின்றன.
சில ஆண்டுகளாக ஆப்பிரிக்கா நாடுகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் பணிகளையும் நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி ஆய்வுகளையும் பில் கேட்ஸின் அறக்கட்டளை நடத்தி வருகிறது. இப்படி நடக்கும் ஆய்வுகள் அனைத்தும் சட்டத்துக்கு புறம்பாக நடத்தப் படுவதாகவும் இந்த ஆய்வுகளில் அப்பாவி மக்கள் தங்களது உயிரை இழப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மக்களுக்கு சுகாதாரத்தை கொடுப்பது போலவும் நோய்களுக்கு தடுப்பூசி வழங்குவது போலவும் பில் கேட்ஸ் தடுப்பூசிகளை விற்று கோடிக் கணக்கான பணத்தை சம்பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இது கொரோனாவிலும் தொடரும் எனவும் மேலும் அச்சத்தை சிலர் தெரிவித்து வருகின்றனர். கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி ஆய்வுகளை விரைந்து முடிக்க பில் கேட்ஸின் அறக்கட்டளை 150 மில்லியன் டாலர்களை ஒதுக்கியிருக்கிறது. அதன்படி பல்வேறு கட்ட 6ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுகளில் இறுதி கட்டத்தை எட்டும் போது நோய்க்கு எதிராக வலுவான ஒரு மருந்து மட்டும் தேர்ந்தெடுக்கப் படும் எனவும் பில் கேட்ஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். வறுமையில் தள்ளப்பட்டு இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் ஏன் இந்த அறக்கட்டளை சோதனைகளை மேற்கொள்கிறது என்ற சந்தேகத்தையும் தற்போது சிலர் எழுப்பி வருகின்றனர்.
கடந்த 2000 ஆண்டில் இந்நிறுவனம் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் தொற்று நோய்க்கு எதிராக ஆய்வுகளை நடத்தியது. பின்பு 2015 இல் எபோலா நோய்த் தொற்று பரவியபோது உலகில் பலரை நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கையில் பங்கு கொள்ளுமாறு அழைப்பு விடுத்தது. இதில் அறக்கட்டளை சார்பாக சில மருந்துகளையும் கண்டுபிடித்து அதை விற்று இந்நிறுவனம் அதிகளவு பணத்தையும் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் 7 ஆப்பிரிக்க நாடுகளில் மலேரியா மருந்துகள் சோதனையை நடத்தியதால் பல குழந்தைகள் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.
ஆப்பிரிக்க நாட்டு பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதாக காட்டிக்கொள்ளும் இந்த அறக்கட்டளை குழந்தை தடுப்புக்காக புரோவெரா ஊசியைப் போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தியது. பல ஆப்பிரிக்க நாடுகளில் கர்ப்பத் தடையை ஆண்களிடம் இருந்து மறைப்பதற்கு இது சிறந்த மருந்து எனப் பரப்புரை செய்யப் பட்டதாகவும் குற்றம் சாட்டப் படுகிறது. அடிப்படையில் இந்த மருந்து கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்றே பல நாடுகளில் நோய்த் தொற்றுக்கு எதிராக புதிய ஆய்வுகளை மேற்கொள்ள பில் கேட்ஸின் அறக்கட்டளை உரிமை வாங்கி வைத்திருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. நைஜீரியா வில் போலியோவிற்கு எதிரான மருந்து விற்பனை செய்து அதிக பணத்தை சம்பாதித்து இருப்பதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
பில் கேட்ஸின் அறக்கட்டளை சார்பாக தென் அமெரிக்காவின் பல ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப் பட்டுள்ளது. சார்ஸ் நோய்த்தொற்று பரவியபோதும் அவர் பெருமளவு நிதி வழங்கினார். இந்தியாவில் இந்நிறுவனம் கர்டாஸில் மருந்து பற்றிய ஆய்வு நடத்தியபோது ஆந்திராவில் சில குழந்தைகள் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படி பல தருணங்களில் இந்த அறக்கட்டளை பாதுகாப்பு உறுதி செய்யாத நிலையில், மனித உரிமைகளுக்கு எதிராகவும் சட்டத்திற்கு புறம்பாகவும் ஆய்வு நடத்துவதாகத் தற்போது பல முனைகளில் இருந்து குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
கொரோனாவில் இந்த அறக்கட்டளை நிறுவனத்தால் நடத்தப் பட்ட ஆய்வில் தற்போது INO4800 என்ற தடுப்பூசி மருந்து தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த மருந்து பயன்பாட்டிற்கு வருவதற்கு கிட்டத்தட்ட 1 வருடம் ஆகும் எனவும் அறக்கட்டளை சார்பாக அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நண்பர், ரோஜர் ஸ்டோன் 2015 ஆம் ஆண்டு பில் கேட்ஸ் நோய்த்தொற்று பற்றிக் கூறிய கருத்துகளை மேற்கோள் காட்டுகிறார். எபோலோ நோய்த்தொற்று பரவிய காலக்கட்டத்தில் பில் கேட்ஸின் அறக்கட்டளை பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு தேவையான உதவிகளை வழங்கி வந்தது. அதுகுறித்து பேசிய பில்கேட்ஸ், “எபோலோ போன்ற நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும் நோய்த் தொற்றுகளை எளிதாகக் கட்டுப்படுத்தி விடலாம். ஆனால் எதிர்காலத்தில் அறிகுறிகளையே வெளிப்படுத்தாமல் உலக நாடுகள் முழுக்க கடும் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் பரவ இருக்கிறது” எனப் பேசியிருந்தார். இந்த கருத்துகளை தற்போது ரோஜர் எடுத்துக் காட்டி முன்னமே நோய்த்தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவும் என எப்படி ஒருவரால் கணிக்க முடியும். இதன்மூலம் கொரோனா நோய்த்தொற்று பரவலில் பில் கேட்ஸின் பங்கு இருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறார்.
போதாதக் குறைக்கு கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தியது பற்றி சீனாவிற்கு பில் கேட்ஸ் பாராட்டுத் தெரிவித்து இருந்தார். இந்த பாராட்டையும் ரோஜர் தனக்கு சாதாகமான கருத்தாகக் கூறி வருகிறார். இந்தக் கருத்துகளை எல்லாம் வைத்துக் கொண்டு பார்க்கும் போது “மைக்ரோசிப்” போன்ற கருவிகளை நோயாளிகளுக்கு மாட்டி பில் கேட்ஸ் மக்களின்மீது நேரடியாக சோதனை செய்ய தயாராகி விட்டார் என பல முனைகளிலும் இருந்தும் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. இந்நிலையில் உண்மை நிலவரம் என்ன என்பதைப் பற்றிய எந்த விவாதத்தினையும் ஊடகங்கள் முன்னெடுக்காமல் குற்றச்சாட்டுகளை மட்டும் அடுக்கிக்கொண்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout