மனைவியை விவாகரத்து செய்கிறார் பில்கேட்ஸ்: 27 ஆண்டுகால திருமண உறவு முடிவு!

  • IndiaGlitz, [Tuesday,May 04 2021]

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில்கேட்ஸ் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

நீண்ட ஆலோசனைக்குப் பின்னரே பிரிய முடிவு செய்திருப்பதாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் 27 ஆண்டுகால திருமண உறவு முடிவுக்கு வருவதாக பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா ஆகிய இருவரும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்

பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா ஆகிய இருவரும் தம்பதியராக தொடரவில்லை என்றாலும் அறக்கட்டளையை தொடர்ந்து இணைந்து நடத்துவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவரும் தம்பதியாக தொடர்ந்தால் தங்கள் வாழ்வில் அடுத்தகட்ட வளர்ச்சியை எட்ட முடியாது என கருதுவதால் பிரிவது என முடிவு செய்துள்ளதாக தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்
ஆனால் அதே நேரத்தில் லாப நோக்கமற்று செயல்பட்டு வரும் பில்கேட்ஸ் - மெலிண்டா அறக்கட்டளையை தொடர்ந்து 21 ஆண்டுகளாக நடத்தி வரும் நிலையில் அந்த பணி தொடரும் என்றும் அந்த பணியை தொடர்ந்து இருவரும் இணைந்து செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளனர். இந்த அமைப்புக்கு 3 லட்சத்து 80 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தனது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

தினக்கூலி வீட்டில் இருந்து ஒரு பெண் எம்எல்ஏ… வாழ்த்திக் மகிழும் நெட்டிசன்கள்!

மேற்கு வங்காளத்தில் தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிப் பெற்றுள்ளது.

ஜெயலலிதாவுக்கு பின் நீங்கள் தான்: நடிகர் சித்தார்த் டுவிட்டுக்கு ஸ்டாலின் பதில்

ஜெயலலிதாவுக்கு பின் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவர் முதல்வராக பதவி ஏற்கப் போகிறார் என நடிகர் சித்தார்த் பதிவு செய்த ட்விட்டிற்கு முதல்வர் பதவியை ஏற்கவிருக்கும் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

ஆக்சிஜன் இன்றி வராண்டாவில் சுருண்டு கிடக்கும் கொரோனா நோயாளிகள்…பகீர் புகைப்படம்!

ஆக்சிஜன் இல்லை எனக் கூறும் தனியார் மருத்துவமனைகளின் மீது கடும் நடவடிக்கை,

ஆக்சிஜன் தட்டுப்பாடு… ஒரே மருத்துவமனையில் 24 பேர் உயிரைவிட்ட துயரச் சம்பவம்!

இந்தியா முழுக்க நேற்று 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

தந்தையின் தோல்வி குறித்து இன்ஸ்டாவில் ஸ்ருதிஹாசன் செய்த பதிவு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் சுமார் 1,700 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார் என்ற செய்தி