நயன்தாராவின் அடுத்த படத்தில் பிஜிலி ரமேஷ்

  • IndiaGlitz, [Thursday,July 19 2018]

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பிஜிலி ரமேஷ் டிரெண்டில் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. தீவிர ரஜினி ரசிகரான இவருடைய பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மிக குறுகிய காலத்தில் ஷோரூம் திறந்து வைக்கும் அளவுக்கு பிரபலமானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நயன்தாரா நடித்து முடித்துள்ள 'கோலமாவு கோகிலா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 'கோலமாவு கோகிலா' படத்தில் இடம்பெற்ற 'கல்யாண ஆசை வந்துருச்சு' சிங்கிள் பாடல் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கபீஷ்கபா என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் நடித்துள்ளவர்களில் ஒருவர் பிஜிலி ரமேஷ். பல்வேறு கெட்டப்புகளில் பிஜிலி ரமேஷ் தோன்றி அசத்தும் இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது

நயன்தாரா, விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்துள்ளார்.

More News

விக்ரம் மகன் துருவ் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்

பிரபல இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்திட வேண்டும் என்று பல நடிகர்கள் காத்திருக்கும் நிலையில் சீயான் விக்ரமின் மகன் துருவ்க்கு அந்த அதிர்ஷ்டம் முதல் படத்திலேயே கிடைத்துவிட்டது.

'நரகாசுரன்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்தசாமி நடித்த 'நரகாசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தது.

ஸ்ரீதேவி கேரக்டரில் நடிக்கும் சூர்யா-கார்த்தி பட நாயகி

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே மற்றும் கார்த்தி நடிப்பில் ரஜத் ரவிசங்கர் இயக்கி வரும் படம் ஒன்றிலும் நடித்து வருபவர் நடிகை ரகுல் ப்ரித்திசிங்.

40 வருடங்களுக்கு பின் ரீமிக்ஸ் ஆகும் கமல் பட பாடல்

ஸ்ரீப்ரியா தயாரித்து நடித்த இச்சாதாரி பாம்பு படமான 'நீயா' படம் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது

கால்பந்து விளையாட்டு வீரரின் படத்தில் விஜய்சேதுபதி

சமீபத்தில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து முடிந்து அதில் பிரான்ஸ் நாடு கோப்பையையும் வென்றது என்பது அனைவரும் அறிந்ததே.