நயன்தாராவின் அடுத்த படத்தில் பிஜிலி ரமேஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பிஜிலி ரமேஷ் டிரெண்டில் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. தீவிர ரஜினி ரசிகரான இவருடைய பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மிக குறுகிய காலத்தில் ஷோரூம் திறந்து வைக்கும் அளவுக்கு பிரபலமானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நயன்தாரா நடித்து முடித்துள்ள 'கோலமாவு கோகிலா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 'கோலமாவு கோகிலா' படத்தில் இடம்பெற்ற 'கல்யாண ஆசை வந்துருச்சு' சிங்கிள் பாடல் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கபீஷ்கபா என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் நடித்துள்ளவர்களில் ஒருவர் பிஜிலி ரமேஷ். பல்வேறு கெட்டப்புகளில் பிஜிலி ரமேஷ் தோன்றி அசத்தும் இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது
நயன்தாரா, விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com